Wednesday, 7 December 2016

டிசம்பர் 11 - காரைக்குடியில் திருவிழா... 

மகாகவி பாரதி விழா 
NFTCL  மாவட்ட மாநாடு 
NFTE மாவட்ட செயற்குழு 

11/12/2016 - ஞாயிறு - காலை 9 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
காரைக்குடி.

பங்கேற்பு 
தோழர்.C.K.மதிவாணன்
NFTCL அகில இந்திய பொதுச்செயலர் 

தோழர்.G.ஜெயராமன் 
NFTE சம்மேளனச்செயலர் 

தோழர்.ஆனந்தன் 
NFTCL மாநிலச்செயலர் 

தோழர்களே... வருக...

Tuesday, 6 December 2016

Condolences .National Federation of Telecom Contract Labourers (NFTCL) extremely sorry to announce the death of Mrs. Leelavati Singh , beloved wife of the General Secretary Of NFTE-BSNL after a prolonged illness in Bihar at about 10.30 am. We pay our respectful homage to the departed soul.  

ஆழ்ந்த இரங்கல்

நமது சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் சந்தேஷ்வர் சிங்க் 
அவர்களின் மனைவி திருமதி லீலாவதி சிங்க் அவர்கள் 
இன்று  காலை 10 30 மணிக்கு காலமானார்.

  அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

"அடிமையான மனிதன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணர்ந்து கொள்கிறான். அவ்வாறு உணர்வதே சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் முதல்படியாகும்.
ஆனால், ஒரு மனிதனின் சுதந்திரம் மறைமுகமாகப் பறிக்கப்பட்டால் அவன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணராமலிருக்கிறான். தீண்டாமை மறைமுக வடிவிலான அடிமைத்தனமாகும்!
- தோழர் அம்பேத்கர்,
#அம்பேத்கர்_நினைவு_தினம் #சுதந்திரம் #தீண்டாமை #அம்பேத்கர்


                       ஆழ்ந்த இரங்கல் 

.


வாழ்க்கையே போராட்டமாகவும் சாதனையாகவும் நிகழ்த்திக் 
காட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா 
அம்மையார் அவர்களின் மறைவுக்கு 
நமது ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்...
என்ன தான் கலாய்த்தாலும் தமிழகத்தின் இரும்பு பெண்மணி அவர்
கொஞ்சம் சிரித்து பேசினாலும் பட்டம் கட்டிவிடும் ஆண்களின் மத்தியில்,அவர்களை காலில் விழ வைத்து ஆட்சி நடத்திய அல்லி ராணி அம்மையார் என்றால் அது மிகையல்ல
எத்தனை விமர்சனம், எத்தனை தாக்குதல் அத்தனையிலும் தன்னந்தனியாய் ஜெயித்தவர்
ஒரு குடும்பமே எதிர்த்து அரசியல் செய்யும் பொழுது, ஒற்றை சிங்கமாய் கர்ஜித்தவர் ..
மொழி புலமையில் இவரை அடித்து கொள்ள ஆளே இல்லை..
துணிச்சலில் இவருக்கு நிகர் எவருமே இல்லை
மரணத்திடம் போராடிய ஜான்சிராணி இறுதியில் வீழ்ந்தார்

Monday, 5 December 2016
அம்மான்னா சும்மா இல்ல டா அவ  இல்லனா யாரும் இல்லடா  

 

Thursday, 1 December 2016

இன்குலாப் ஜிந்தாபாத்...

இன்குலாப் ஜிந்தாபாத்...
தொழிலாளர்களின் வேத மந்திரம்...

அதனையே தனது பெயராகக் கொண்டவர் 
நம் மண்ணின் மைந்தர்...
ஒடுக்கப்பட்ட மக்களின் பிறப்பிடம்... 
இராமநாதபுரம்  மாவட்டம்  கீழக்கரையில் பிறந்த...
பேராசிரியர் தோழர். சாகுல் ஹமீது...

மக்கள் கவிஞர் எனப் பெயர் பெற்ற
தோழர்.இன்குலாப்...
இன்று 01/12/2016 உடல் நலக்குறைவால்...
மண்ணுலகை விட்டு மரித்தார்...

மனுசங்கடா... 
நாங்க  மனுசங்கடா...
உன்னைப்போல...
அவனைப்போல...
எட்டு சாணு...
உயரமுள்ள மனுசங்கடா...

என்ற அவரது உணர்ச்சிமிகு பாடல்...
ஒடுக்கப்பட்டவர்களின் 
உரிமை கீதமாக என்றென்றும் ஒலிக்கும்...


மக்கள் கவிஞர் 

இன்குலாப் 

மறைவிற்கு 

நமது மனங்கசிந்த அஞ்சலி...


மக்களுக்காக
வாழ்வை
அர்பனிப்பது
பெரும் தியாகம்
அதைவிட
பெரும் தியாகம்
அப்படிப்பட்ட
போராளியோடு
பயனிப்பது
தோழர் ஆர். நல்லக்கண்ணு
அவர்களுடனான
புரட்சிப்
பயணத்திலிருந்து
தன்
பெரு வாழ்வை
நிறைவு செய்த
அன்னைக்கு
எனது
வீரவணக்கம்....
Like
Comment


                         கண்ணீர் அஞ்சலி 


தோழர் R.நல்லகண்ணு அவர்களின் துனைவியார் ரஞ்சிதம் அம்மா மறைவுஆழ்ந்த வருத்தத்துடன் அஞ்சலி.


Monday, 28 November 2016

வரலாறு உன்னை வந்தனம் செய்யும்...
58 ஆண்டுகள் செங்கொடியை உயர்த்திப் பிடித்த
 அசல் புரட்சித்தலைவர் பிடல் காஸ்ட்ரோ 
பிடல் காஸ்ட்ரோ...
அமெரிக்காவை அதிர வைத்தவன்...
58 ஆண்டுகள் செங்கொடியை உயர வைத்தவன்...

பிணி சேரா தேசத்தை உருவாக்கியவன்... 
அணி சேரா தேசங்களின் அங்கமானவன்...

பாலினத்தொழிலாளியை பட்டதாரி ஆக்கியவன்...
நோய் தீர்க்கும் பட்டதாரிகளை நாடெங்கும் உருவாக்கியவன்...

638 தடவை முயன்றும்...
CIA இவன் மயிர்க்கால்களைக் கூட அசைத்ததில்லை...

வரலாறு என்னை விடுதலை செய்யும்...
பிடல் காஸ்ட்ரோவின் புகழ் மிக்க வசனமிது...

செங்கொடி உலகில் பறக்கும் வரை...
வரலாறு காஸ்ட்ரோவை வந்தனம் செய்யும்...

செங்கொடியை தளராமல் உயர்த்திப்பிடித்த..
உலகின் மாபெரும் பொதுவுடைமைத் தலைவனுக்கு 
செங்கொடி தாழ்த்திய அஞ்சலி...
==================================================================

2016 ஏப்ரல் 19ம் நாள் 
கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் 
தோழர்.பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய இறுதி உரை

கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் என்றென்றும் 
ஒரு புவிக்கோளத்தின் அழியாத சின்னமாக மிளிரும்...
மனிதகுலத்தின் மாண்புகளைக் காப்பதற்காக 
அந்தச் சிந்தனைகள் செயலாற்றிக் கொண்டே இருக்கும்...
மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் 
பொருட்களையும்கலாச்சாரச் செல்வங்களையும் 
அது உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்...
அந்த மகத்தான பொன்னுலகத்தைப் பெறுவதற்காக 
நாம் ஓய்வின்றி போராடுவது அவசியம்.
மாநாட்டு அரங்கில் நான் உரையாற்றுவது 
இதுவே கடைசியாக இருக்கலாம்... 
தொடர்ந்து முன்னேறுவோம்...
அந்தப் பாதையை மிகச்சரியானதாக இருக்குமாறு செப்பனிடுவோம்...
அதற்காக நாம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் மீது 
அதிகபட்ச விசுவாசத்துடனும் மிக உயர்ந்த 
ஒன்றுபட்ட சக்தியுடனும் முன்னேறுவோம்...
நம்முடைய இந்தப் பயணம் எவராலும் தடுக்க முடியாதது...