திங்கள், 31 மார்ச், 2014

தோழர் எஸ்.ஆர்.சி என்று அனைவராலும் அன்போது அழைக்கப்படும் தோழர்.ராமச்சந்திரன் இன்று பணி ஓய்வு

நம்மால் எஸ்ஸார்சி என்று அன்போடு அழைக்கப்படுகின்ற தோழர் S ராமசந்திரன் அவர்கள் 31-03-2014 -ல் சென்னை தொலைபேசி  DGM HR & Admin பகுதியில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.  கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தோழமையோடும் மனித நேயத்தோடும் நம்மோடு பழகுபவர். 
இங்கு அவர் மாற்றலில் வந்து NEPP செக்‌ஷனில் பொறுப்பேற்று நான்காம்பிரிவு தோழர்களுக்காக துரித கதியில் வேலை செய்தவர். தொழிற்சங்கத்தில் பல  பொறுப்புகளை  ஏற்று செயல்பட்டபோதும், தொழிற்சங்க பொறுப்புகள் இல்லாதபோதும் கம்யூனிச கட்சி போராட்டங்களில் பங்கேற்றவர். குறிப்பாக சென்னை தொலைபேசியில் நடைபெற்ற் போராட்டத்தில் பங்கேற்று FR 17A தண்டனைக்கு உள்ளானவர். சிறந்த எழுத்தாளர். தமிழக அரசின் விருது பெற்றவர். தாமரை பத்திரிக்கையில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதியவர். .அவரி எழுதிய கதைகள் “திண்ணை” வலைதளத்தில் வந்து பல்வேறு தமிழ் ஆர்வலர்களின் பாராட்டை பெற்றது.
        புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழியாக்கம் என பல தளங்களில் படைப்புகளை தந்து வருகின்றவர்.  ஆங்கில மொழியிலும் கட்டுரை கவிதை படைப்புகள் வந்துள்ளன.  இவர் எழுதிய நெருப்புக்கு ஏது உறக்கம் தமிழக அரசின் பரிசு பெற்றது.
        அவர் தனது ஓய்வு கால்த்தை தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் கழிக்க காஞ்சி மாவட்டதின் சார்பாக வாழ்த்துகிறோம்.
செல்லப்பாவின் கேள்விகளுக்கு பதில்கள்
                      (ஆதாரத்துடன்)


செல்லப்பாவின் குற்றச்சாட்டு :
தோழர் மதிவாணன் Forum அமைப்புக்கு எதிரி ! 

டெல்லியில் Forum சார்பாக நடந்த கூட்டத்தில் NFTE-BSNL சார்பாக உரையாற்றுகிறார் தோழர் சி.கே.மதிவாணன். அவர் Forumக்கு எதிரி என்று எழுதியுள்ள செல்லப்பா இதே கூட்டத்தில் கலந்து கொண்டார். இதுவே அவரின் பொய் பிரச்சாரத்தை அம்பலமாக்குகிறது.  


செல்லப்பாவின் குற்றச்சாட்டு :
மதிவாணன் கமிஷன் பெறவே அடுக்கு மாடி திட்டத்தை உருவாக்கினார். 

அன்றிலிருந்து  இன்றுவரை தொடர்ந்து அநியாயத்தை எதிர்த்து போராடி வருபவர் தோழர் மதிவாணன். அவர் ஊழலுக்கு ஒத்துப்போவார் என்று சொன்னால், அதை சொல்பவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்று 
கேட்பவர் மனதில் நினைத்துக் கொள்வார்.  


 செல்லப்பாவின்கேள்வி : 
தமிழ் மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்களுடன் அவர் ஒரே மேடையில் பேசாமல் இருப்பது ஏன் ? 

                      இந்த  படங்களே அதற்கு பதில்.

















                        இரட்டைக்குழல் துப்பாக்கியாய்......


 நமது கூட்டுறவு  சங்கத்தை BSNLEU சங்கத்தின் கைப்பாவையாய் மாற்ற பகல் கனவு காணும் செல்லப்பாவின் முயற்சியை சென்னை 
தொலைபேசி மற்றும் தமிழ் மாநில  NFTE,  FNTO SEWA BSNL, அண்ணா யூனியன் தோழர்கள்  இரட்டை குழல் துப்பாக்கியாய் இருந்து       
    முறியடிப்பார்கள் என்பது திண்ணம்.    


                   
         செல்லப்பாவின் கேவலமான தரம் !


அந்தோ பரிதாபம் மதிவாணன் என்று தலைப்பிட்டு  BSNLEU சென்னை மாநிலச் செயலர் கோவிந்தராஜனும், தமிழ் மாநிலச் செயலர் செல்லப்பாவும் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.  

அதில் மதிவாணன் அவர்களின் செயல்தன்மை பற்றி தவறாக சித்தரித்து உள்ளனர்.

  யார் தவறு செய்தாலும் தைரியமாக எடுத்துச் சொல்லும் குணம் படைத்தவர்தான் தோழர் மதிவாணன் என்பது யாவரும் அறிந்தே......

ஆனால் செல்லப்பா கம்பெனியின் பாரம்பரிய வழக்கம் என்ன ?

மதிப்புவாய்ந்த  நமது தலைவர்களை கீழ்க்கண்டவாறு தரக்குறைவாக எழுதிய செல்லப்பாவிற்கு  தரம் பற்றி பேசும் தகுதி உண்டா ?  

  
  அருமைத் தோழர் குப்தா அவர்களை  "அரசின் ஆசைநாயகன் " என்று தொலைத் தொடர்பு தோழன் இதழில் எழுதிய செல்லப்பாவின் முகவிலாசம் என்ன ?

  1995ல் அர்ச்சனா டெலிகாம் கம்பெனியிடம் அருமைத் தோழர் குப்தா 
 " சூட் கேஸ் வாங்கினார் " என்று நாக்கூசாமல் பேசியவர்தானே 
இந்த செல்லப்பா ?

உத்தமத் தலைவர் ஜெகன் அவர்களை BlackBelt ஜெகன்னாதன்  என்று வர்ணித்து நோட்டிஸ் போட்ட செல்லப்பாவிற்கு தோழர் மதி அவர்களைப் பற்றி எழுத அருகதை உண்டா ?

லைன் ஸ்டாப் சங்க அகில இந்திய பொதுச் செயலர் தோழர் சந்திரசேகர் காலமானவுடன் அந்த பொறுப்புக்கு தோழர் ஜெகன் தேர்ந்தெடுக்கப்
ப ட்டார்  .  அதை  தனது தொலைத் தொடர்பு தோழனில் கிண்டலாக , ஒரு இளைஞர் அந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர் பார்த்தோம் ! கிடப்பதெல்லாம கிடக்கட்டும் கிழவியை கொண்டு வந்து மணையில் வை என்பது போல  வயதானவரை 2000த்தில் சிலிகுரியில் நடந்த செயற்குழுவில் பொதுச் செயலர் ஆக்கிவிட்டார்கள் என்று எழுதி, தோழர் ஜெகன் அவர்களை அவமதித்த செல்லப்பாவின் தரம் நாம் நன்கு அறிந்ததே ! 

ஆலவட்டம் போட்ட குன்னூர் அதிகார வர்க்கத்தை எதிர்த்து போர்ப்பரணி பாடிய தோழர் ஆர்.கே அவர்களை அட்டைக் கத்தி ஆர்.கே என்று எழுதியவர்தானே இந்த செல்லப்பா ?

 78.2 DA பற்றி உடன்பாடு போட்ட முதல் நாளன்று இரவு, நமது சங்கத் தலைவர் தோழர் இஸ்லாம் நிர்வாகத்திற்கு விலை போய்விட்டார் என்று நாடெங்கும் கிசுகிசுப் பிரச்சாரம் செய்ததுதானே செல்லப்பா வகையறா ! 

  ஆம் ஆத்மீ கெஜ்ரேவாலின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட BJP, அவரை தாக்குவது போல உள்ளது, நாடு போற்றும்  Whistleblower மதிவாணன் அவர்களின் துணிச்சலான செயல்பாட்டால் அஞ்சி நடுங்கும்  செல்லப்பா கோவிந்த ராஜன்  கம்பெனியின் , ஊழல் நடந்து விடும் என்ற குடுகுப்பைக் காரன்  துர்பிரச்சாரம். 

அப்படி பார்த்தால் எந்த பெரிய Projectஐயும் செய்ய முடியாதே ? அதை கண்காணிக்க அனைத்து மாநிலச் செயலர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்த பின்னும் அதை ஏற்க மறுப்பது ஏன் ?


                         " Make Impossible Possible"
                                                          -Our legendary Leader O.P.Gupta 

 கார்ப்பரேஷன் ஆனால் அரசு பென்சன் கிடைகாது என்று பிரச்சாரம் செய்தது செல்லப்பா வகையறா. 

சாத்தியமில்லை என்பதை சாத்தியமாக்குவதுதான்  நமது பணி என்று சூழுரைத்து அதை சாதித்துக் காட்டியவர் பெருந்தகை O.P குப்தா . 


இன்று குப்தா பெற்றுக்கொடுத்த அதே அரசு பென்சனை அபிமன்யு, நம்பூதிரி, ராமன் குட்டி, D. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அனுபவித்து வருவது போல, அடுக்கு மாடி கட்டிய பின் இதே செல்லப்பாவும் கோவிந்தராஜனும் எங்களுக்கும் ஒரு Flatஐ ஒதுக்கி தாருங்கள் என்று கேட்கப் போவது உறுதி. 

                                                                                                        S.ஆனந்தன் 
                                                                                                      மாநில செயலர் 
                                                                                                              NFTCL 
                                                                                                

ஞாயிறு, 30 மார்ச், 2014

இதய அஞ்சலி





முன்னாள் மாநில சங்க நிர்வாகியும் முன்னாள் மாவட்ட செயலரும் தற்போதைய மாவட்ட துணை தலைவருமான தோழர் P பிச்சைபிள்ளை அவர்கள் இன்று(31-03-2014) காலை காலமானார் .அவர்தம் மறைவு  அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் நமது இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.
தோழரின் மறைவுக்கு நமது இதய அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.



சனி, 29 மார்ச், 2014

மோடியும் மன்மோகனும் நாணயத்தின் இருபக்கங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கருத்து

புது டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையை வெளியிடும் (இடமிருந்து) பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் ஏ.பி. பரதன், டி.ராஜா.| படம்: சங்கர் சக்ரவர்த்தி.
நரேந்திர மோடியும் மன்மோகன் சிங்கும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாஜக வையும் புறக்கணித்துவிட்டு மாற்று அணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கையை வியாழக் கிழமை வெளியிட்டது. டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் ஏ.பி. பரதன், குருதாஸ் தாஸ் குப்தா, டி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய தாராளமயக் கொள்கை களை தொடர்ந்து பின்பற்றி வருவதால், நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்து வருகி ன்றன. முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஊக்கு விக்கும் செயலில் காங்கிரஸும் பாஜகவும் ஈடுபடுகின்றன. மக்களின் பிரச்சினைகளை நாடாளு மன்றத்தில் எடுத்துச் சொல்ல இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த வர்களை அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்பு, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது: “தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சிகளின் அணிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருப்பது அழிவைத் தரும் தாராளமயக் கொள்கைகளை தொடர்ந்து ஆதரித்து வருவதா அல்லது மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக் கான பலன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் கொள்கைகளை பின்பற்றுவதா என்பதுதான். மக்கள் சந்தித்து வரும் சமூக பொருளாதார அடிப்படை பிரச்சினைகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடாளு மன்றத்தில் எழுப்பினால், அது தொடர்பாக அர்த்தமுள்ள விவாதம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸும் பாஜகவும் நடந்து கொள்கின்றன. தனியார்மயமாக்குவதை இந்த இரு கட்சிகளும் இணைந்து ஊக்குவிக்கின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியின் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும், தங்களுக்குச் சாதகமாக ஒத்துழைப்பு தரக்கூடிய நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை விரும்புகின்றன.
குஜராத்தில் விவசாயிகளி டமிருந்து நிலம் பறிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இதன் காரணமாக விளைச்சல் குறைந்துவிட்டது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மக்கள் அவதிப் படுகின்றனர். அந்த மாநிலத்தில் மோடி தலைமையிலான அரசு, பெரும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது” என்றார் சுதாகர் ரெட்டி.
தேர்தலுக்குப் பிறகு பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் இடதுசாரிகள் உள்ளிட்ட மூன்றாவது அணி ஆட்சி அமைக்குமா என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி. பரதனிடம் கேட்டபோது, “தேர்தலுக்குப் பிறகு அது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம். தேவைப்பட்டால் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஆதரிக்காத கட்சிகளுடன் இணைந்து செயல் படுவோம். இந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், “அரசு, தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கும், தனியார் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை தனியார் நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும்” என்றார்.
தோழர்களே!  தோழியர்களே!! 

                                                  நமது BSNL -லில்  பணிபுரியும் ஒப்பந்த 

ஊழியர்களுக்கு 01-04-2014முதல் VDA  நாள் ஒன்றுக்கு 

ருபாய் 13/-உயர்ந்துள்ளது.உயர்த்தப்பட்டுள்ள VDA ஏப்பரல் 

முதல் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை 

மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .

                BASSIC              =3600
                      VDA             =3000      
                                            _____                                               
                 TOTAL              =6600
                                            _____
                                                                                                 
 பிடிப்பு     EPF                -  792
                     ESI                  -  116
                                                _______
                       TOTAL                   908                Rs.  6600
                                                  Rs. -908
HOME    PAY                           Rs. 5692           

                                               தோழமையுடன்
                                             P.தமிழ்ச்செல்வன்  
                                             நெய்வேலி-கிளை             
New Organization for Contract Labours in Telecom Sector:
 National Federation of Telecom Contract Labours (NFTCL), a new
organization was already launched as per the guidance of the Central leadership of
AITUC. This organization is unique as it is the only organization which covers all
the contract labours in Telecom sector both private and public.
 The NFTCL’s first state conference of Tamil Nadu was held on 23/02/2014
and Kerala state conference is scheduled in the last week of April at Earnakulam.
In Maharastra and Bengal states already efforts have begun to hold the respective
state conferences. In July 2014 a National seminar on “The Working condition of
Contract Labours in Telecom sector” will be held at Chennai. In Punjab and
Karnataka states also comrades are planning to form NFTCL soon.
 At a recent meeting in Cuddalore (Tamil Nadu) Com. M.Appadurai, Ex MP
and Vice-President of AITUC introduced the New flag of the NFTCL in his
capacity as the president of the NFTCL Tamil Nadu state unit. The most exploited
section of workers to day in Telecom sector are our Contract labours. As per the
data released nearly 60 percentage of Telecom workforce is on contract only. The
system of contract labours is too high in our sector. Few organizations which at
present exist for the contract labours in BSNL only cover the BSNL contract
labours. But NFTCL covers all the contract labours who are working in both
private and public Telecom companies. It is the duty of every one of us to
strengthen and help this organization to grow leaps and bounds throughout the
country.
Com.  C.K.Mathivanan

Dated :27-03-2014

வெள்ளி, 28 மார்ச், 2014

27-03-2014 அன்று நடைபெற்ற RGB உறுப்பினர்கள் தேர்தல்களில் NFTE அணி அமோக வெற்றி.

   நேற்று (27-3-14 அன்று) நடைபெற்ற RGB உறுப்பினர்கள் தேர்தல்களில்
தஞ்சாவூர், கும்பகோணம், வேலூர், சேலம், தர்மபுரி பகுதிகளில்
NFTE அணி அமோக வெற்றி.

வெற்றியை துவக்கிவைத்த நமது மாவட்ட சங்கங்களுக்கு நன்றி,

இனியும் தொடரும் நமது வெற்றி பாதை...

அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் C.K. மதிவாணன் அவர்களின் உரையிலிருந்து...

24-3-14 அன்று கடலூரில் நடைபெற்ற NFTCL மாநிலசங்க நிர்வாகிகளுக்கு நடைபெற்ற
பாராட்டுவிழாவில்  தோழர் C.K.மதிவாணன், துணைப்பொதுச்செயலர் அவர்கள் ஆற்றிய
 உரையிலிருந்து ...

கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் NFTE சங்க தோழர்களை
தோற்கடிக்க வேண்டும் என்று BSNLEU சங்கம் கடுமையாக முயற்சித்துவருகிறது.
அது தனது தொலைதொடர்பு தோழன் இதழிலும், சுற்றறிக்கையிலும் BSNLEU சங்கத்திற்கு
வாக்களித்தால்தான், சொஸைட்டியில் ஊழல் நடக்காது என்று பொய்பிரச்சாரம்
நடத்திவருகிறது. பன்மாநில கூட்டுறவு சொஸட்டி  2002 -ம் ஆண்டு விதிகளுக்கு மாறாக, உறுப்பினர்களுக்கு
ரூ 40 ஆயிரம் பிரித்தளிப்போம் என் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்துவருகிறது. ஆகையால்
தமிழக NFTE  சங்க தோழர்கள் ஒன்றுபட்டு, BSNLEU சங்கத்தின் துரோக பிரச்சாரத்தை முறியடித்து,
கூட்டுறவு சங்கத்தை ஒரு கட்சியில் கட்டுப்பாட்டில் போகக்கூடாது என பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால் நமது சங்கத்தினை தோற்கடிக்க நினைக்கும் BSNLEU சங்கத்துடன், ஸ்ரீதரன், மாவட்டசெயலர்
தலைமையில்
கடலூரிலும், தமிழ் மாநில சங்க நிர்வாகி தோழர் மனோகரன்
தலைமையில் திருச்சியிலும் BSNLEU சங்கத்துடன் கூட்டணி வைத்துள்ளனர்.
இது இயற்கைக்கு மாறான வினோதமாக உள்ளது. NFTE சங்கத்தோழர்கள் அனைவரும் ஒன்று பட்டு
நின்றாலே அனைத்து RGB உறுப்பினர்களும் சுலபமாக வெற்றியை அள்ள முடியும். இந்த பொன்னான
வாய்ப்பை நிராகரித்துவிட்டு, தேவையின்றி BSNLEU சங்கத்திற்கு சிலRGB பதவிகளை விட்டுகொடுத்தது,
நியாயமானது அல்ல, ஆகவே தோழர்கள் ஸ்ரீதரன், மனோகரன் போன்றோர் தங்களது NFTE  சங்கத்தை
பிளவு படுத்தும் போக்கை கைவிட்டு ஒன்று படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும்,

88 ஏக்கர் நிலத்தை BSNLEU சொல்வதுபோல வீட்டுமனைகளாக பிரித்து கொடுப்பதாக இருந்தால்கூட
சுமார் 1936 பேருக்கு மட்டுமே!!! 1/2  கிரவுண்டு நிலம் என்ற வகையில் மனைகள் கிடைக்கும்.1936 பேருக்கு கிடைக்கும் மனையின் லாபத்தில், சுமார் 20 ஆயிரம் பேருக்கு, தலா 40 ஆயிரம் ரூபாய்
எப்படி தர முடியும்.

 ஆக மொத்த ரூ 80 கோடி லாபம், மற்றும் நிலத்தின் விலை ரூ 20 கோடி என சேர்த்து
பார்த்தால் ரூ 100 கோடி நிலத்தின் விலையாக வருகிறது.

இந்த விலையை,

நிலத்தை வாங்கபோகும் 1936 பேரின் தலையில் சுமத்தினால், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை எத்தனை லட்சங்கள் என கணக்கிடுங்கள், என்ன தலை சுற்றுகிறதா...

எனவே,

ஊழியர்களை மோசடி செய்து ஏமாற்றி அங்கீகார தேர்தலில் வெற்றி பெறுவதைப்போல, கூட்டுறவு
சொஸைட்டியிலும் வெற்றி பெறலாம் என BSNLEU கூட்டணி கனவு காண்கிறது.  இது பகல் கனவாகவே
முடியும்.

அனேகமாக, இவர்கள் சொல்லும் விலையை கேட்டு, 1/2 கிரவுண்டு மனைக்கு பதிலாக ரூ 40 ஆயிரம்
போதுமென்று உறுப்பினர்கள் பதறி ஓடுவதற்கும் வாய்ப்புள்ளது.

இந்த ஏமாற்று காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வியாழன், 27 மார்ச், 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா வாக்களிக்கவில்லை!

    ஜெனிவா: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் 23 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. 

ஜெனிவாவில் நடைபெற்ற  ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்கத் தீர்மானம் மீதான விவாதம், இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இலங்கை அரசைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி பல நாடுகளிடம் பேசியதை கண் கூடாக பார்க்க முடிந்தது. 
இந்தியா எதிர்ப்பு

இதனிடையே இலங்கை மீதான தீர்மானம் தொடர்பாக பல நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்த நிலையிலும், இந்த தீர்மானம் தொடர்பாக இந்தியா எந்த நிலைபாட்டை எடுக்கும் என்பது இன்றுவரை சஸ்பென்ஸ் நீடித்தது. இந்நிலையில் இந்தியா தனது தரப்பில் வாதத்தை முன்வைத்து பேசிவிட்டு, அதே சமயம் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல்  புறக்கணித்தது.

இந்தியா தரப்பில் பேசிய பிரதிநிதி, இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாகவும், இத்தீர்மானம் நிறைவேறினால் இலங்கை மேற்கொண்டு வரும் பணிகள் பாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் 13வது சட்ட திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும். அண்டை நாடு என்ற முறையில் இலங்கையில் வளர்ச்சி பணிகளை இந்தியா மேற்கொள்கிறது. வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்டதை இந்தியா வரவேற்கிறது என்றும் தெரிவித்தார்.
இலங்கை பதில்
முன்னதாக அமெரிக்க தீர்மானம் குறித்து இலங்கை பிரதிநிதி பதிலளிக்கையில், ''அமெரிக்காவின் தீர்மானம் எங்களின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது. சர்வதேச விதிகளுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.
மேலும், அமெரிக்க தீர்மானத்தை உறுப்பு நாடுகளும் எதிர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
 ஆதரவு நாடுகள்
தே சமயம்  இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக பேசின. அதே வேளை சீனா,பாகிஸ்தான்,கியூபா இன்னும் பிற இலங்கை ஆதரவு நாடுகள் தீர்மானத்தின் பத்தாவது குறிப்பை அகற்ற சொல்லி கோரின.

பத்தாவது குறிப்பில்," இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை, இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக கண்காணிக்க வேண்டும்,இதுதொடர்பாக ஐ.நா.சபைக்கு 28 வது மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றையே இலங்கை ஆதரவு நாடுகள் அகற்றச் சொல்லி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
வாக்கெடுப்பில் வெற்றி
இந்நிலையில் விவாதத்தின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 23 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதே சமயம் தீர்மானத்தை எதிர்த்து 12 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் ஒட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. 

ஜெனீவாவிலிருந்து மகா.தமிழ்ப்பிரபாகரன்

செவ்வாய், 25 மார்ச், 2014





























































ஞாயிறு, 23 மார்ச், 2014

பகத் சிங்கின் இறுதி நாள்...மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ஞானகுரு தூக்கிலிடப்பட்ட தினம்...அதனை பற்றி தி இந்து பத்திரிக்கையில் வந்த கட்டுரை


லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.
பிறகுதான், சிறைச்சாலையின் சவரத் தொழிலாளி பர்கத் சிறையின் ஒவ்வொரு அறையாகச் சென்று, அன்றிரவு பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு தூக்கிலிடப்படப்போவதை அடிக்குரலில் சொன்னார்.
கைதிகள் நிலைகுலைந்துபோனார்கள். பகத் சிங்கும் அவரது தோழர்களும் இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அந்த நேரம் நெருங்கும்போது அதிர்ந்துபோனார்கள். சீப்பு, பேனா, கைக்கடிகாரம் போன்ற பகத் சிங்கின் பொருட்கள் எதையாவது கடத்திவர முடியுமா என்று பர்கத்திடம் கேட்டார்கள். ஒரு தேசத்தையே உத்வேகப்படுத்திய இளம் புரட்சியாளரின் நினைவின் பொருட்டு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படக்கூடிய பொருளாக இருக்கும். பர்கத், பகத் சிங்கின் சிறையறைக்குச் சென்று ஒரு சீப்புடனும் பேனாவுடனும் திரும்பினார். அதற்கு எல்லோரும் உரிமை கொண்டாடினார்கள். பிறகு, குலுக்கல் நடந்தது. எல்லோரும் மீண்டும் அமைதியானார்கள். தங்கள் அறைகளுக்கு வெளியே இருந்த பாதையிலிருந்து இப்போது அவர்களின் பார்வை விலகவில்லை. பகத் சிங் தூக்கு மேடைக்கு அந்த வழியாகப் போவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒருமுறை அப்படி அந்த வழியாக பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்கள் சிறையறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, லாகூர் சதி வழக்கில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக்கொள்ளவில்லை என்று பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார் கேள்வி எழுப்பினார்.
“புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்” என்று பதிலளித்தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”
ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.
அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.
பகத் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.”
சுகதேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார்.
மேத்தா சென்ற பிறகு அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
பகத் சிங் அந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.
“ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
தூக்குமேடை நோக்கி...
மூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள்.
“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும் 
இது எங்கள் மண்ணாக இருக்கும் 
இது எங்கள் வானமாக இருக்கும் 
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில் 
மக்கள் கூடுவார்கள் 
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு 
மரியாதை செலுத்துவார்கள்.”
மூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங்.
“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.
தூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார்.
அவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார்.
சடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
புரட்சியால் மட்டுமே முடியும்!
பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு. பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது. பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.
ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:
“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”
பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.
இந்தியாவின் பழமை வாய்ந்த அமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் வரை எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை. இந்த அமைப்புதான் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது. தத்துவஞானிகள் உலகைப் பல விதங்களில் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும்.
குல்தீப் நய்யார் எழுதிய ‘வித்தவுட் ஃபியர்: த லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்’ என்ற நூல் கவிதா முரளிதரனின் மொழிபெயர்ப்பில் ‘மதுரை பிரஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.