சனி, 28 பிப்ரவரி, 2015


At third day of CPI state conference in Coimbatore 

Comrade C.K.Mathivanan moves a resolution on the 

nationwide indefinite strike by BSNL employees and officers 

from 17-03-15.




கோவையில் நடைபெரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நமது தோழர்கள்  C.K.M  மற்றும் G.ஜெயராமன்


தனி 2 ன் மாவட்டச் செயலாளர் G.ஜெயராமன் 

C P I மாநில மாநாட்டில் பேசினார்.




சனி, 21 பிப்ரவரி, 2015

மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சாவூரில் பெருந்திரள் தர்ணா தொடங்கியது.

மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சாவூரில் பெருந்திரள் தர்ணா தொடங்கியது.BSNL தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து குவிந்தனர். AITUC மாநிலச் செயலாளர் C.சந்திரகுமார் போராட்டத்தை துவக்கி வைத்து பேருரையாற்றினார்.கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் திருஞானம் வாழ்த்துரையாற்றினார்.தமிழர் தேசீய முன்னணியின் பொதுச்செலாளர் அயனாபுரம் முருகேசன் பேசினார்.மாலை 5மணிவரை போராட்டம் தொடர்ந்தது.

போராட்டம் தோழர் சி.கே.மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தோழர்கள்  ஜெயராமன், சுப்பராயன், அசோக்ராஜன், ஆனந்தன், காமராஜ்(திருச்சி),
பாபு உட்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.


சென்னை ,தமிழ்நாடு NFTE(BSNL), தொழிலாளர் கல்விமையம் ,

NFTCL அமைப்புகளின் சார்பாக ,500 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்

பங்கேற்ற தோழர் ,C K மதிவாணன் தலைமை தாங்கிய, மீத்தேன்

வாயு திட்டத்தை கைவிடக்கோரி,மாபெரும் தொடர் முழக்க 

போராட்டம், தஞ்சை மண்ணை அதிரவைத்தது ....














திங்கள், 16 பிப்ரவரி, 2015


NFTCL இரண்டாவது சம்மேளன தினம் கொடியேற்றம் பெண்ணாடம் திட்டகுடி  கிளை  சார்பில் 16-02-2015அன்று நடைபெற்றது .தோழியர் கனிமொழி  கொடியேற்றினர் . 








     தோழர் .கோதண்ட ராமன் கோஷத்தோடு கலை கட்டியது திட்டகுடி  கிளை கூட்டம் .

பெண்ணாடம் & திட்டகுடி கிளை  சார்பில் ருபாய் 3900/- இறந்த தோழர் பாலு -(சிதம்பரம்) வழங்கப்பட்டது . 



மீத்தேன் எரிவாயு திட்டம் கைவிடக்கோரி போராட்டம் வேர்க்கால் வேந்தன்  கோ.ஜெயராமன் 
Image result for g jayaraman nfte-bsnl

I am NFTE-BSNL  "  என்று ப்ரிண்ட் ஆன T-shirt 

பனியன் விற்றவருக்கு சம்மேளனச் செயலர் பதவியா ?  என்று ஒரு அரைவேக்காடு கேள்வி கேட்டதாம் !

" I am NFTE -BSNL "  என்று ப்ரிண்ட் ஆன T-shirt ஐ ஜபல்பூரில் நடந்த 
அகில இந்திய மாநாட்டில்   விற்பது ஒன்றும் தகாத செயல் அல்ல !  

எனக்குதான் எல்லாம் தெரியும், ஆகவே, நான் சொல்வதைத்தான்
நீங்கள் எல்லாம் கேட்கவேண்டும் என்று தன்னையே  பெரிய 
 பிம்பமாக நினைத்துசெயல்படாமல், எந்தப் பணியும்  கீழ்த்தரமானது அல்ல என்று கருதி செயல்படும்  எளிமைக்கு சொந்தக்காரர்.

 நிலத்தின் மேலே இருக்கும்  மரங்களின் பல வண்ண இலைகளும் தழைகளும், கிளைகளும் தான் மரம் என்று யாராவது கருதினால் அவர் முட்டாளாக இருப்பார். அந்த மிகப்பெரிய மரத்தையே தாங்கும் வல்லமை படைத்த வேர்கள் வெளியே தெரியாது. அப்படி சங்கத்தின் தலையாய வேராக இருப்ப்பவர்களில் அவரும்  ஒருவர் என்றால் அது மிகையாகாது.   

எல்லோரிடமும் அன்போடும் பண்போடும் பழகும் இனிய குணம் படைத்தவர். மற்றவர்கள் மனம் புண்பட்டுவிடுமே என்று  கருதி  மென்மையாக பேசுபவர்.

தனது உயர்நிலை பள்ளி காலத்திலேயே வடநாட்டு தலைவர்கள், 
தமிழ் மக்கள் மீது ஹிந்தியை திணித்த போது, அதை தட்டிக் கேட்டு  
ஒரு நாள் சிறை வாசம்  இருந்து பொது வாழ்க்கையை துவக்கியவர்.

 கல்லூரி நாட்களிலேயே தி.மு.க மாணவர் அணி துணைச்செயலராக பொறுப்பேற்று  இலங்கை தமிழர்களின்  உரிமைக்காக போராடியதால்  கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.

1980ல்  கள்ளகுறிச்சியில் இலாகா பணி துவங்கிய நாள் முதல் சங்கப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் .

கடலூர் மாவட்டத்தின் மூத்த முன்னோடிகளான தோழர்கள் ரகு,ரங்கநாதன்  ஆகியோரால் அடையாளங்காணப்பட்டு  இடதுசாரி அரசியலுக்கும் தொழிற்சங்க  பணிக்கும் ஆட்படுத்தப்பட்டவர்.

பண்ருட்டிக்கு  மாற்றலில் சென்றவுடன் கிளைச்செயலருக்கு 
நடந்த போட்டியில் பெருவாரியான வாக்குகள் பெற்று 
தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

அப்போது கடலூரில் தேசிய சங்கம் வலுவாக இருந்தது. 
கடுமையான  இயக்கப்பணிகள்.... அனைத்திலும் தன்னை 
ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தால் மாவட்ட துணைச்
செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து போராட்டமே வாழ்க்கையானது. கேசுவல் ஊழியர்களின் சம்பளப் 
பிரச்னைக்காக தீரமுடன்  போராடியதால் 46  நாட்கள் 
சஸ்பென்ஷனில் இருந்தார்.

மூன்றாம் பிரிவு ஊழியரின்  பிரச்னைக்காக ஓங்கி குரல் கொடுத்த காரணத்தால் மீண்டும்  48 நாட்கள்  சஸ்பென்ஷனில்  இருந்தார்.

( பாவம் ! மற்றவர்களுக்கு சஸ்பென்சன் வாங்கிக் கொடுத்துவிட்டு 
தான் மட்டும்  தப்பிக்கும் கலையை அறியாதவர் )

 இவரது செயல்பாட்டில் ஈர்க்கப்பட்ட தோழர் ரங்கநாதன், 
இவரை லைன்-ஸ்டாப் சங்க  மாவட்ட செயலராக்கி அழகு பார்த்தார்.அடுத்த பத்து ஆண்டுகள் லைன் ஸ்டாப் சங்க 
மாவட்ட  தலைவராக  பொறுப் பேற்று  லைன்-ஸ்டாப் மாவட்ட செயலருக்கு உறுதுணையாக இருந்தார்.

அவரது செயல்பாடு அனைத்து தலைவர்களையும் 
தோழர்களையும் மனங்குளிர வைத்த  காரணத்தால் 
அவருக்கு ஒரு அரிய பெருமையை வழங்கினார்கள். 
கடலூரில் பிரம்மாண்டமாய்  நடந்த லைன்-ஸ்டாப் 
மாநாட்டின்போது  தொண்டர் படையின் தலைவனாய் , 
NFPTE   சங்க  செங்கொடியினை  அம்பாரியின்  
மேல் அமர்ந்து  எடுத்துச் சென்று  தலைவர்களிடம்  ஜெயராமன்தான்  வழங்க வேண்டும் என்று  முடிவெடுத்தார்கள்  வரவேற்பு குழுவினர். 

கடலூரில் நடந்த NFTE-BSNL இணைப்பு மாநாட்டில் மாநில 
துணைச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தனது பணியை 
செவ்வனே ஆற்றினார்.திருநெல்வேலி மாநில மாநாட்டில் 
மாநிலப்  பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கோவை, தஞ்சை 
மாநில மாநாடுகளிலும் மீண்டும், மீண்டும்  மாநிலப் பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கப் பணத்தை  விரயமாக்காமல், 
சிக்கனமாக செலவு செய்து சேர்த்து வைத்தார். மாநில பொருளராக மட்டுமில்லாது அனைத்து அமைப்பு பிரச்னைகளிலும் தனது முத்திரையை பதித்தார்.

 கோவூர் வைத்திய நாத தெருவில் உள்ள சங்க கட்டிடத்தை 
புனரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் அதில் 
தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.அவரது சீரிய சிந்தையில் உதிர்த்தது தான் புரவலர் திட்டம். ஐந்தாயிரம் 
ரூபாயோ அதற்கு மேலோ கட்டிட நன்கொடையாக வழங்கும் தோழர்களின் பெயர் சங்க அலுவலகத்தில் பொறிக்கப்படும் என்று கடலூரில் நடந்த மாநில செயற்குழுவில் அறிவித்தார்.
 திருச்சி  தோழர் R.V, கோவை  எல்.சுப்பராயன் முதலிலும்
இரண்டாவதாகவும்  தங்கள் பெயரை பதிவு செய்து துவக்கிட, 
பல லட்சங்களை இந்த திட்டத்தின் மூலம் திரட்ட முடிந்தது.

  தனது அயராத அர்ப்பணிப்பு காரணமாகவே அவர் பாட்னாவில்
 நடந்த அகில இந்திய மாநாட்டில் சம்மேளனச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மதுரையில் தோற்கடிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது 
அவர் கூறிய கருத்து. " வெற்றியோ தோல்வியோ அது குறித்து 
நான் சிறிதும் கவலைப்படவில்லை.. என்னை ஆளாக்கிய  அமைப்பின் முடிவுக்கு கட்டுப்பட்டேன் என்பதே எனக்கு முழு மகிழ்ச்சியை அளிக்கிறது "  அந்த  கட்டுப்பாட்டின் காரணமாகத்தான் வேறு பலருக்கும்   கிடைக்காத பெருமை  அவருக்கு  கிடைத்துள்ளது. 

அவரது சீரிய பணி தொடரும். காலம் மாறும் ! காட்சிகளும் மாறும் !!  அவருக்கே உரிய அனைவரையும் அரவணைத்து செல்லும் பாணியின் 

வியாழன், 12 பிப்ரவரி, 2015


கும்பகோணம் WEBSITE-ன்  அவலம் ....,

தோழர்களே  ...,முடங்கி போனவர்கள்  நாங்கள் என்றால் AITUC office க்கு- ஓடி போனவர்கள் நீங்களா ?
1) ஒற்றுமை ஒரு வரி கோரிக்கையில் வந்திருக்கும், STR பகுதி அன்பழகன் சென்னை தொலை பேசியில் சந்தா  செலுத்துகிறார் MEMBERSHIP ELECTION -ல் சென்னையில்  ஒட்டு    போடுவார் ஆனால் தோழர் பட்டாபியை மட்டும் மாநில செயலர் என்று கூற காரணம் SOCIETY  ELECTION -ல் டைரக்டர் பதவி தோழர் CKM தரவில்லையாம்.

(2)  தமிழ் மாநில தோழர்கள் பல பேர்  ஒற்றுமையின் எதிரி பட்டாபி என்று கருதினால் , தோழர் .CKM - ன்   சென்னை தொலை பேசி மாநிலத்திற்கு சந்தா செலுத்த முடியுமா ? 

CGM  வந்தார் .. பேசிட அனுமதிக்கவில்லை மு(ட)ழக்கவாதிகள் !மண்டபத்து பொறுப்பாளர் ...மன்றாடினார் அமைதி காக்க 

STR பகுதியில் அத்துமீறல் நடை பெறாமல் இருந்திருந்தால் .. அருமையான  செயற்குழு நடந்து இருக்கும்... 

 செயற்குழு மேடையில் ...வலது ஓரத்தில் ... ஓர் உருவம் 
அமைதியாய் ...சலனமில்லாது ...வேடிக்கை பார்த்தது ???
ஊர் வந்து சொன்னோம் ... ஓர் தோழனிடம் 
அவரை ... அந்த மௌனம்  காத்த   தோழனை பற்றி ...
நெஞ்சில் சுருக்கென தைக்க சொன்னான் அந்த தோழன் ...
" ஜபல்பூர்  மாநாட்டில் பனியன் விற்று கொண்டிருந்தவருக்கு 
சம்மேளன செயலர் பதவி தந்த ... உங்களுக்கு 
இதுவும் வேண்டும் ... இன்னமும் வேண்டுமென !!!

 எதோ ஒரு  WASTE LAND இந்த வசனம் சொல்லியதாம் அதை கும்பகோண டிகிரி காபி எழுதியதாம் . பனியன் விற்ற தலைவர் பற்றி எழுதிய நீங்கள் ஏன் அடி தடியில் ஈடுபட்ட தலைவர் சேது பற்றியும் VILLUPURAM செல்வம் பற்றியும், அமைதியாய் ரசித்த  தலைவன் R.K மற்றும் ஜெயபால்  பற்றி எழுதவில்லை ?.
இவர்கள் என்ன ...,செய்து கொண்டிருந்தனர் .இவர்கள் பஞ்சாயத்து செய்து அமைதியை ஏற்படுத்தி இருக்கலாம், ஏன் செய்யவில்லை ?   

(கழுதைக்கு  தெரியுமா கற்பூர வாசனை? ) 

சம்மேளன செயலர் பதவி   உங்களை போன்று பிச்சை கேட்டு பெற்றதில்லை . தொழிற்சங்க போரட்டங்களுக்காக  அவர் பெற்ற நிர்வாக நடவடிக்கைகள் சொல்லும் .இன்று PUNISHMENT என்றால் நிர்வாகத்தின் காலில்  மண்டியிடும் பலர்,  பனியன் விற்க கூட அருகதை அற்ற தலைவர்கள்.UNION ஒன்றுபட கூடாது என்று திரியும்  தலைவர்களை எங்களுக்கு தெரியும்  . சம்மேளன செயலர் பற்றி பேச வக்கற்ற தோழா திருத்தி கொள் !!! .

நமது தோழர்களும் ... சேர்ந்து கூட்டத்தை வெளி தள்ளினோம்..,இத்தனையும் ... அரங்கேறிய பொழுது 

கூட்டத்தை வெளியில் தள்ளினோம்..பெருமையா? யாரை தள்ளினோம் BSNLEU தோழர்களையா ? நமது சங்க தோழர்களை.  கேள்வி கேட்டால் பதில் சொல்ல அருகதை அற்ற தலைவர்கள், NFTE  பாரம்பரியம் பற்றி பேச முடியாது  . நீங்கள்  எங்களை வெளியில் தள்ளி, நாங்கள் உங்களை  வெளியில் தள்ளி ...., இதனால் நமது சங்கத்தை  விட்டு சாதாரண தோழர்கள்  வெளியேறாமல்  இருந்தால் சரி .., 



மீத்தேன் எரிவாயு திட்டம் கைவிடக்கோரி போராட்டம்

குண்டர்கள் அல்ல ! அணுக்கத்தொண்டர்கள் !!
குப்பைகள் அல்ல ! சங்கம் காக்கும்  கோமேதகங்கள் !!! 


சென்னை தொலைபேசி மாவட்ட சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கத்திற்குமிடையே ஒருங்கினைப்பு  அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஜபல்பூர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட  சென்னை தொலைபேசி மற்றும் தமிழ் மாநில சங்கங்களைச் சார்ந்த புதிய அகில இந்திய சங்க நிர்வாகிகளுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழாவினை ஏற்பாடு  செய்து பெருந்தன்மையோடு அதற்கு தமிழ் மாநிலச் செயலர்  பட்டாபிராமனையும் அழைத்தார் தோழர் மதிவாணன். 

ஆனால் பட்டபிராமனின் ரகசிய திட்டமோ ஓற்றுமையே வரக் கூடாது என்பதுதான். அதனால்தான், சேலத்தில் அதைவிட பிரம்மாண்டமான விளக்க  கூட்டத்தில் பங்கேற்கப் போகிறேன் என்று சாக்கு போக்கு சொல்லி அந்த கூட்டத்திற்கு வராமல் ஒதுங்கி நின்றார். 

 தனது நம்பிக்கைகுரிய மூத்த தோழன் சொன்ன அறிவுரையை புறந்தள்ளினார். ஒற்றுமை வராமல் இருக்க,    சென்னை  தொலைபேசி  மாநில சங்கத்தை வம்புக்கு இழுத்து, பிரச்னைகளை உருவாக்கி, பிளவை நிரந்தரமாக்குவதற்காகத்தான்  மதுரையில் STR  கூட்டத்தை நடத்தி சென்னை தொலைபேசியைச் சார்ந்த அன்பழகனை மாவட்டச்  செயலராக்கினார்  பட்டாபிராமன்.

பல மாதங்கள் பொறுமை காத்த சென்னை தொலைபேசி மாநிலத் தோழர்கள், தமிழ் மாநில சங்க செயற்குழுவிற்கு நியாயம் கேட்டு வந்தார்கள்.  சங்கத்தை காக்கும் அந்த அணுக்கத் தொண்டர்களை குண்டர்கள் என்று வேலுர் வெப் சைட்டில் எழுதியுள்ளனர். 

குப்பைகள் என்று காரைக்குடியார் பகன்றுள்ளார்.

 அவர்கள் குண்டர்களாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்...........

    சிறிது யோசித்துப் பார்ப்போம் ! 

அரங்கத்திலிருந்தவர்கள் அடிவாங்காமல்  இருந்திருப்பார்களா ?

பல மண்டைகள் உடைந்திருக்காதா !!  

காயமின்றி அனைவரும் ஊர் திரும்பி இருக்க முடியுமா !? 

காவல் துறையினரை அழைத்தது யார் ? பட்டாபிராமன்  மற்றும் முரளி தானே !

காவல் துறையினரிடம் முரளி மூக்குடைபட்டது  மறந்து விட்டதா !? 

பிரச்னையை புரிந்து கொண்ட  சர்க்கிள் இன்ஸ்பெக்டர் " சென்னை தோழர்கள்  தவறாக எதுவும் செய்யவில்லை ! சென்னைக்காரரை (அன்பழகனை)  நீங்கள் வெளியேற்றினால் அவர்கள் அமைதியாக சென்றுவிடுவார்கள் !! " என்று கூறிவிட்டு போலீஸ்காரர்களை  திரும்ப  அழைத்துச் சென்று விட்டார்  !

காரைக் குடி யார் எழுதிய வரிகள்:  

" பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?.."..


குப்பைகளை வெளியேற்றினோம் என்று கூறி உண்மையை உடைத்து விட்டார் காரைக் குடி யார் !

அந்த 70 பேர் உண்மையிலேயே குண்டர்களாக  , இருந்திருந்தால்,

மதுரை தோழர்களாலேயே விரட்டி அடிக்கப்பட்ட இரண்டெழுத்துவில்லன்  ஜாடை காட்டிய பிறகு, காரைக்குடியார், ,நாகர்கோவில்  ஜோசப்,  கடலூர் இளங்கோ போன்ற சிலரால் " அவர்களை  குப்பைகளைப் போல தள்ளினோம்"  என்று காரைக் குடியார் எழுதியுள்ளாரே !! அது  நடந்திருக்குமா! சாத்தியப்பட்டிருக்குமா !!

கெட்டிக்காரன் புழுகு எட்டே நாள் என்பதுபோல, வேலூர்காரரின் 
புழுகை தோலுறித்து காரைக் குடி யாரே, தன்னை அறியாமல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்... 

அவர்கள் குண்டர்கள் அல்ல ! குப்பைகள் என்று !!

நம்மை பொறுத்தவரை அந்த 70 பேர் உண்மையிலேயே குப்பைகள் அல்ல 
                          சங்கம் காக்கும்  கோமேதகங்கள்  !!