திங்கள், 22 ஜூன், 2015

சிதம்பரம் கேபிள் பழுது நமது NFTCL சங்க தோழர்கள் சீரிய முயற்சியால் உடனடியாக சரி செய்யபட்டது .

சிதம்பரம் நகர பகுதியில் நகராட்சி கழிவு நீர் வாய்க்கால் தோண்டும் போது  நமது 1600 pair அளவுகொண்ட கேபிள் துண்டிக்கப்பட்டு பல தொலைபேசி இணைப்புகள் செயல் இழந்தன. நிர்வாகம் உடனடியாக சரிசெய்யும் பணியை துவங்கியது. சரி செய்யும் பணியில் (21-6-2015) ஞாயிறு விடுமுறை நாளென்றும் பாராமல் நமது சங்கத்தை சார்ந்த  ஒப்பந்த ஊழியர்கள் தோழர்கள் சத்யராஜ், மதி,நாகராஜன் ஆகிய மூன்று பேர் மற்றும் அந்த பகுதி டெலிகாம் மெக்கானிக் தோழர்.T.ராஜேந்திரன்  ஆகியோர்  கேபிள் ஜாயின்ட் பணியில் ஈடுபட்டு சரிசெய்தனர். இத் தோழர்களுக்கு நமது NFTCL மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். 
  
இப்பகுதியில் கேபிள் பகுதியில் பணிபுரிவதற்கு ஏற்கனவே மேலும் சில ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகத்திடம் கோரியிருந்தோம். நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்று கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் பணியில் இருக்கிறது .


                                          
தோழர்கள் சத்யராஜ்,நாகராஜன் கேபிள் பணி செய்யும் போழுது ....
தோழர்கள் மதி ,சத்யராஜ்,நாகராஜன் கேபிள் பணி செய்யும் போழுது ....

புதன், 17 ஜூன், 2015

ESI மருத்துவ அட்டை நமது மாவட்டத்தில் பல வருடங்களாக உள்ளது . தற்பொழது புதியதாக HOUSE KEEPING மற்றும் கேபிள் பணியில் இணைக்க பட்ட தோழர்களுக்கு ESI புகைப்படம் எடுத்த காட்சி    



BSNLEU  மாவட்ட செயலர் பாரதி மற்றும் நமது GM சங்க பொறுப்பாளர் நந்தகுமார்
                            நமது மாவட்ட சங்க பொருளாளர் மதிவாணன்

                     நமது செயலர் தோழர் ஆனந்தன் மற்றும் ESI INSPECTOR 

EX -SERVICEMEN SECURITY CONTRACTOR  சோமசுந்தரம் ,நமது சங்க தோழர் பிரான்சிஸ் மற்றும் நமது செயலர் .

வெள்ளி, 12 ஜூன், 2015

இது ஒரு காமடி 

NFTE & BSNLEU  நோட்டீஸ் போர்டில் 


"ஒப்பந்தக்காரர்களின் ஏற்பாட்டின் 

பேரில் ESI நிர்வாகத்தினர் இந்த முகாமை 

நடத்துகின்றனர்"




NFTCL சங்கம் அணைத்து கிளைகளுக்கும் 

சென்று ESI புகைப்படம் எடுத்து அனைவரும் 

2008 முதல் அந்த சலுகையை பெற்று 

வருகிறோம் என்பது அணைவரும் அறிந்ததே!!!!!!!!  

ESI  அடையாள அட்டை
ZONE-2, ZONE-3, ZONE-4-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் ESI அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்பட முகாம் 16-06-2015 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை  நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களின் ஏற்பாட்டின் பேரில் ESIநிர்வாகத்தினர் இந்த முகாமை நடத்துகின்றனர். தோழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வர இயலாதவர்கள்இருக்கின்றவர்களை வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அடையாள அட்டை பெற்றுக்கொண்ட பின் சேர்த்தல் நீக்கல் செய்ய இயலும். ஏற்கனவே அடையாள அட்டை பெற்று அதில் ஏதேனும் திருத்தும் செய்துகொள்ள விரும்புபவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலா


சிரிப்பு வருது!!! சிரிப்பு வருது !!!


சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!!!


நீண்ட நாள் கோரிக்கை 

நிறைவேறியதுதாம் ... காரைக்குடி தோழர்களுக்கு 

நாங்கள் கடலூரில் 2008 பெற்ற ESI சலுகை பெற 

2015 வரை பெற முடியாமல் இருந்து விட்டு 

இன்று பெற்றோம், நீண்ட நாள் கோரிக்கை என்று 

சொல்வது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!!!


காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்புச்செயலர்
தோழர்.மாரிமுத்து தனது மனைவி திருமதி.மஞ்சுளாவுடன்
ESI அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் காட்சி. 



செவ்வாய், 9 ஜூன், 2015


தோழர் .ஜெகன் நினைவு நாள் 

தோழர் .ஜெகன் நினைவு நாள் ஜூன் 7 ஆம் தேதி அன்று நமது NFTCL மாநில சங்கம் சார்பாக தோழர் .ஜெகன் படத்திற்கும் மற்றும் திருஉருவ  சிலைக்கும் மாநில செயலர் தோழர் S .ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதையை செய்தார் .