திங்கள், 31 அக்டோபர், 2016


வாழ்க்கையே போராட்டம்தான் ,போராடாமல் வென்றதில்லை போராடி தோற்றதில்லை !!!




நன்றி!!! காரைக்குடி வலைத்தளம் ...

ஒப்பந்த ஊழியரும்... உரிமை மீட்பும்...

இந்தாண்டு ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும்
 ஒப்பந்த ஊழியர்களுக்குப் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. 
போனஸ் அளவு தொகையில் மாற்றம் இருந்தாலும் போனஸ் என்பதை ஒப்பந்த ஊழியருக்கு மறுக்க இயலாது என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. தொடர்ந்து போனஸ் பிரச்சினையை தொழிலாளர் நல அதிகாரிகளிடம் இடைவிடாமல் எடுத்துரைத்து அவர்களிடமிருந்து உரிய வழிகாட்டுதல்களை... உத்திரவுகளை தமிழ் மாநிலம் மற்றும் சென்னைத்தொலைபேசி நிர்வாகங்களுக்கு அனுப்பியதில் 
NFTCL சங்கத்தின் பங்கு அளப்பரியது. 

போனஸ் பிரச்சினையைப் போலவே
 சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில்
 கேபிள் பணி, எழுத்தர் பணி மற்றும் காவல் பணி புரியும் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டக் கூலியை BSNL நிர்வாகம் வழங்கிட உத்திரவிடக் கோரி சென்னை துணை முதன்மை தொழிலாளர் ஆணையரிடம் NFTCL சங்கம் பிரச்சினையை எழுப்பியிருந்தது. தொடர்ந்து பல சுற்றுக்கள் பேசிய பின் தற்போது Deputy . CLC  அவர்கள் 25/10/2016 அன்று தமிழகம் மற்றும் சென்னை தலைமைப் பொதுமேலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

BSNL நிறுவனத்தில்  ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு திறனுள்ள  பணிகளில் ஈடுபடுத்தப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. இது சட்ட விதிகளுக்கு முரணானது. 

எனவே BSNLலில்  கேபிள் பணி, எழுத்தர் பணி மற்றும் காவல் பணிபுரியும்  ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்சக் கூலி சட்டத்தின்படி அவரவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஒழிப்புச்சட்டம் விதி 
25 (v) (a ) மற்றும் (b)ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  
Deputy . CLC  தெரியப்படுத்தியுள்ளார்.

அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை 
04/11/2016 அன்று  சென்னையில் நடைபெறும். 
தோழர்.ஆனந்தன்  தலைமையில் நாமும் பங்கு பெறுவோம்.

சமவேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும்
 என உச்ச நீதிமன்றம் மீண்டும் அழுத்தமாக
 கூறியுள்ள இந்த வேளையில்...
Deputy . CLC அவர்களின் மேற்கண்ட 
தலையீடு முக்கியத்துவம் பெறுகிறது.  
BSNL நிர்வாகம் இனியும் தொடர்ந்து 
ஒப்பந்த ஊழியர்களை சுரண்ட இயலாது.
NFTCL சுரண்ட விடாது...

தொழிலாளர்கள் விழித்து விட்டார்கள்...
NFTCL தொழிலாளருக்காக எழுந்து விட்டது...

தமிழகத்தில் பத்தாண்டுகள் பின்னோக்கிப் போயிருந்த 
ஒப்பந்த ஊழியர் வாழ்வை மீட்டெடுக்க
NFTCL பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் 
தலைமையில்   பாடுபடும் 
NFTCL ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கும்..
அதன் உணர்வு மிக்க மாநிலச்செயலர் 
தோழர்.ஆனந்தன் அவர்களுக்கும் 
நமது வாழ்த்துக்கள்...

சபாஷ்... ஆனந்தா...

வெள்ளி, 21 அக்டோபர், 2016

          ஒப்பந்த ஊழியர் போனஸ் 

கடலூர் மாவட்டத்தில் பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 3100 முதல் 3300 வரை போனசாகப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. GM ஆபீஸ் ZONE -1 குத்தகையை  NEAT AND CLEAN  SECURITY SERVICES என்னும் நிறுவனம்  எடுத்துள்ளது.இதனைப்போலவே HOUSE KEEPING ,WATCH GUARD என்னும் காவல் பணி மற்றும் CABLE பணி செய்யும் தோழர்களுக்கும் உடனடியாகப் போனஸ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட குத்தகைக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மற்ற குத்தகைக்காரர்களும் உடனடியாக போனசை பட்டுவாடா செய்வார்கள் என்று நம்புகிறோம். 
தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தவிர்க்க இயலாதது.
ஒப்பந்த ஊழியர் போனஸ் 

காரைக்குடி மாவட்டத்தில் காவல் பணி புரியும்
 ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூபாய்.3300/- 
போனசாகப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 
காவல் பணிக்கான  குத்தகையை  MALLI SECURITY SERVICES என்னும் நிறுவனம்  எடுத்துள்ளது. இதனைப்போலவே HOUSE KEEPING மற்றும் CABLE பணி செய்யும் தோழர்களுக்கும் உடனடியாகப் போனஸ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட குத்தகைக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மற்ற குத்தகைக்காரர்களும் உடனடியாக போனசை பட்டுவாடா செய்வார்கள் என்று நம்புகிறோம். 
தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தவிர்க்க இயலாதது.

புதன், 19 அக்டோபர், 2016

அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் 

நாடு முழுவதுமுள்ள 65000 செல் கோபுரங்களை 
தனியாகப்பிரித்து 20000 கோடி மதிப்பீட்டில்..
துணை நிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் 
மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து 
27/10/2016 
BSNL  அனைத்து சங்கங்களின் சார்பாக 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

BSNL  என்னும் பெரு நிறுவனத்தின் 
வளர்ச்சியைத் தடுக்க முயலும்...
தனி நிறுவன  துணை நிறுவன 
முயற்சியைத் தடுப்போம்...
ஒன்றாய் அணி திரள்வீர் தோழர்களே..
போனஸ் பட்டுவாடாப் பணிகளை   இன்று 20/10/2016 ERPயில் முடிப்பதற்கு  சம்பளப்பட்டுவாடா  செய்யும்  கணக்கு அதிகாரிகள்  அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  நிதி ஒதுக்கீடு வந்தபின் போனஸ்  பட்டுவாடா செய்யப்படும். நிதி வந்து விட்டால் இந்த வாரமே  போனஸ் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணமுற்ற தோழர்களுக்கான போனஸ் இந்த மாத சம்பளப்பணியுடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
================================================
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் 
இம்மாத சம்பளத்தை 25/10/2016க்குள் 
பட்டுவாடா செய்யக்கோரி நமது மத்திய சங்கம் 
நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
================================================
17/07/2016 அன்று நடந்த JAO இலாக்காத்தேர்வில் 
குளறுபடியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 
அதைக் கணக்கில் கொள்ளாமல் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன. 
எனவே தேர்வு  முடிவுகளை மீண்டும் பரிசீலிக்குமாறு 
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
================================================
BTEU BSNL சங்கம் NFTE தலைமையிலான தேசிய தொழிலாளர் கூட்டமைப்பில் அணி  சேர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக BTEU BSNL சங்கம் FNTO சங்கத்துடன் அணி சேர்ந்திருந்தது.
================================================
இராஜஸ்தான்  மற்றும்  தெலுங்கானா  மாநிலங்களில்  
DELOITTE  குழு பரிந்துரையின்படி BUSINESS AREA வணிகப்பகுதிகள் அமுலாக்கத்தை மேற்கொள்ள CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.  தமிழகத்தில் வணிகப்பகுதிகள் அமுலாக்கம்
 ஏப்ரல் 2017ல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
================================================
அரசு ஊழியர்கள் தங்களது விடுப்பை 300 நாட்களுக்கும் மேலாகவும் சேர்த்து வைத்துக்கொள்ளலாம் என பஞ்சாப் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் நமக்கொன்றும் பலனில்லை. 
மதிக்கப்படாத தீர்ப்புக்கள் நம் தேசத்தில் ஏராளம்... ஏராளம்...
கண்ணீர் அஞ்சலி 


       நமது லால்பேட்டை தொலைபேசி நிலையத்தில் செக்யூரிட்டியாக  பணிபுரியும் தோழர் D.வேலுமணிஒப்பந்த ஊழியர் அவர்கள் 19-10-2016 இன்று காலை மாராடைப்பால் இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
    அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.நமது சங்கத்தின் சார்பாக நமது மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P.M.K.D.பகத்சிங்க்(பெண்ணாடம் NFTE-கிளைசெயலர்)அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். 

செவ்வாய், 18 அக்டோபர், 2016

Bsnl நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம். போனஸ்.EPF மற்றும் ESI போன்ற பல்வோறு சலுகைகளை தர மறுக்கும் ஒப்பந்ததாரர்களை கண்டித்தும் அதை கண்டுகெள்ளாத BSNL நிர்வாகத்தை கண்டித்தும் 15/10/2016 அன்று நடந்த பெருந்திரள் தர்ணா போரட்டம் சென்னையில் நடைபெற்றது.அதில் சில காட்சிகள்.



+































INSPIRING DHARNA AT CHEPAUK GUEST IN CHENNAI ON 15-10-16 BY NFTCL, TAMILNADU:

. More than 500 contract Labourers from all over Tamilnadu took part in this Dharna. Com. Mali,president presided. Comrades CKM, S.Anandan, Ramasamy, Mari, Vijayakumar, Asokarajan, Anbalagan, Rajasekaran and Elangovan and many others spoke at the Dharna. Com. Mari from Karaikudi informed the preparations for the State conference of NFTCL in Karaikudi on 11-12-2016 and welcomed the Contract Labourers in large numbers to the first State Conference.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016


நான் தோற்றுப் போகலாம்...
அதன் பொருள்
வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல...
- சே குவேரா


யார் பெயரை சொன்ன உன் எதிரிக்கு பயம் வருதோ அவன் தலைவனே


சனி, 8 அக்டோபர், 2016


காரைக்குடியில் உதயமானது NFTCL

காரைக்குடியில் 07/10/2016 அன்று உதயமானது NFTCL அகில இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனம் .இவ்விழாவில் தோழர்கள் .மாரி -NFTE மாவட்ட செயலர்  மற்றும்  முருகன். மாவட்ட செயலர் NFTCL ஏற்பாடு செய்தனர் . இக்கூட்டத்தில் அவை நிறைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டம் NFTCL பேரியக்கத்தில்  தங்களை இணைத்து கொண்டனர் . இவ்விழாவில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் .குணசேகரன் , NFTE-யின்  மாநில அமைப்பு செயலர் தோழர் .சுபேதார் அலிகான் , NFTE-யின்  சிறப்பு அழைப்பாளர் தோழர் .அசோகராஜன் ,மற்றும் விழுப்புரம் தோழர்கள்  .ஹரிகிரிஷ்ண  NFTCL கிளை செயலர் ,தோழர் .கணேசன்  NFTE கிளை செயலர் , தோழர் ரவி மாவட்ட அமைப்பு செயலர் NFTCL , தோழர் பாலமுருகன் ,நெடுமாறன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் .நல்ல உபசரிப்பு ,நல்ல நோக்கம், நல்லஉழைப்பு. மென்மேலும் காரைக்குடி மாவட்ட சங்கம் வளர்ச்சியடைய மாநில சங்கம் வாழ்த்துகிறது .















NFTCLU Branch Inagral meeting at Kalmandabam exge on 8.10.2016 with com.Babu, com.Kodhandapani, com. Parthiban,
Com. Ananthadevan and NFTE Leaders.










புதன், 5 அக்டோபர், 2016


இன்றைய ஒப்பந்த தொழிலாளர்கள் நிலை                             சொல்லும் இந்த படம் .....

Solapur Dist BSNL MDU.....



JAO தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு உடனடியாக பயிற்சி வகுப்பு துவக்குவதற்கு ஹைதராபாத்தில் உள்ள NATFM பயிற்சி மையத்திற்கு CORPORTE அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் தற்காலிகப் பதவி உயர்வு அளிப்பதற்கு விருப்பங்கள் கேட்கப்பட்டுள்ளன. 03/11/2016க்குள் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டால் தற்காலிகப் பதவி உயர்வு நடைமுறைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
================================================
BSNL ஊழியர்களுக்கு மாதம் ரூ.200/-க்கு அலைபேசியில் இலவசமாகப் பேசும் வசதி தரப்பட்டிருந்தது. இதில் ரூ.50க்கு தனியார் தொலைபேசியில் பேசுவதற்கு வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வசதி செப்டம்பர் மாதத்திற்குப் பின் தரப்படவில்லை. மேற்கண்ட வசதியை ஊழியர்களுக்கு அளித்ததின் மூலம் BSNL பழுது நீக்கும் சேவை FRS மேம்பட்டுள்ளதா? என CORPORATE அலுவலகம்
 மாநில நிர்வாகங்களைக் கேட்டுள்ளது. 
மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்தபின்பு 
மேற்கண்ட வசதியை தொடருவது பற்றி முடிவெடுக்கப்படும்.
================================================
2014-15ம் ஆண்டிற்கான போனஸ்  ஒப்புதல்  
REMUNERATION COMMITTEE எனப்படும் BSNL வாரிய 
ஊதியக்குழுவிற்கு   அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாரம் 
உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
================================================
JTO மற்றும் JAO இலாக்காத்தேர்வுகளில் பல்வேறு தவறுகள் இருந்ததை நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியது. 
தற்போது இப்பிரச்சினை EXPERT COMMITTEE நிபுணர் குழுவிற்கு அனுப்பப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
================================================
பல்வேறு தொலைத்தொடர்பு சேவைகளில்  களமிறங்க 
70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் DOTயிடம் அனுமதி கேட்டுள்ளன.
சாறைப் பிழி... தூர ஏறி...

சென்னை முதன்மைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் 
பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த  11 ஒப்பந்தத் தொழிலாளர்கள் 
பணி  நீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற செய்தியைப் படித்தவுடன்...
நம் மனம் கொதித்தது... கனத்தது...

இது நவராத்திரி காலம்...
தொழிலாளர்கள் என்ன கொலு பொம்மைகளா?
இந்த ஆண்டு கொலுவிற்கு... 
இந்த பொம்மைகள்  வேண்டாம் என்று சொல்வதற்கு?

நன்றியுணர்ச்சி நமது தேசத்தின் பண்பாடு... அடையாளம்...
அதனால்தான் ஆயுதங்களுக்கு கூட ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்...
ஆடு... மாடுகளுக்கு கூட பொங்கல் வைத்துப் பூரிக்கிறோம்...

ஆனால்...
ஆண்டாண்டு காலம் உழைத்து இளைத்த தொழிலாளியை...
சக்கையாய்ப் பிழிகிறோம்...சாற்றைச்  சுவைக்கிறோம்...
சந்தர்ப்பம் வரும்போது சாதாரணமாக வீசி எறிகிறோம்...

ஒரு மர நிழலில் ஓய்வெடுத்த ஒரு மனிதனுக்கு..
அந்த மரத்தின் கிளையை முறிக்க உரிமையில்லை என்றார்  புத்தர்...
வெய்யிலில் காய்ந்தாலும் நிறுவனத்திற்கு நிழல் தருபவர்கள்...
நித்தம் பணி செய்து களைத்திடும் தொழிலாளர்களே...
அவர்களின் கிளையை முறிக்க எவருக்கும் உரிமையில்லை....

ஒரு ஏழையின் முகத்தைப்பார்...
அவன் வாழ்வில் உன் பங்கு என்ன என்று எண்ணிப்பார்....
அவன் வாழ்வில் ஒரு துளி கூட உன் பங்கு இல்லையெனில்..
நீ வாழ்வதில் ஒரு துளி கூட பயனில்லை...
என்று அழுத்தமாகச் சொன்னார் அண்ணல் காந்தி....

விதிகளுக்கும்... சட்டங்களுக்கும் மேலானது மனிதநேயம்...
தமிழ் மாநில நிர்வாகம் மனித நேயத்தோடு செயல்பட வேண்டும்...
நவராத்திரி காலம் வெகுமதிகளின் காலம்...
உழைத்தவனுக்கு வெகுமதி வேண்டாம்...
அவனைத் தொடர்ந்து உழைக்க அனுமதித்தாலே போதும்...
இதுவே நவராத்திரியில் நமது எதிர்பார்ப்பு.... வேண்டுகோள்...

திங்கள், 3 அக்டோபர், 2016

NFTCL ORGANISATIONAL TOUR:

 Sholapur district (Maharashtra) NFTCL conference on 13-10-2016.
Discussion with Regional Labour Commissioner (RLC) in Poona on 14-10-2016.
In both the meetings Comrades CKM and Anandan will participate on behalf of NFTCL Headquarters.
On 15-10-2016 in Chennai a massive Dharna will be organised near Chepauk Guest House from 2 pm to 6 pm on telecom Contract Labour demands. NFTE will participate in this Dharna expressing Solidarity with the agitating contract Labourers.
ஒப்பந்த ஊழியர் சங்க சிறப்புக்கூட்டம் 

தோழர்களே....
மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும் 
ஒப்பந்த ஊழியர்களின் உரிமைகளை வென்றிடவும்...
அவர்களுக்கு சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய 
சலுகைகளைப் பெற்றிடவும்...
சரியான சங்கத்தில் சங்கமிக்க வேண்டியது 
காலத்தின்  கட்டாயமாகும்... நமது கடமையாகும்...

எனவே...
ஒப்பந்த ஊழியர்களின் மீது உண்மையான பற்று கொண்டு 
ஒப்பந்த ஊழியர்களுக்காக ஓயாது உழைக்கும் NFTCL 
தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தை 
நமது மாவட்டத்தில் துவக்கவும்...
அவர்களது பிரச்சினைகளைப் பேசித் தீர்வு கண்டிடவும்...
சிறப்புக்கூட்டம் 07/10/2016 அன்று காரைக்குடியில் நடைபெறுகிறது.
அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு 
சிறப்பிக்க வேண்டுமாய்...
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

தோழமையுடன்...
சி.முருகன் 
ஒருங்கிணைப்பாளர்.

சனி, 1 அக்டோபர், 2016

Hearing notice is served to both CGM.'s of Tamil Nadu and Chennai by Hon'ble  Dy. Chief Labour Commissioner  regarding our petition under Rule 25(2)(v.)(a) &(b) of CLR Act 1971 filled by our NFTCL Union on 05/10/16.

தார்ணா போராட்ட கோரிக்கைகள் வெல்ல அனைவரும் ஒன்றாய் சங்கமிப்போம்