திங்கள், 26 செப்டம்பர், 2016


              23/09/2016 -மாநில செயற்குழு

23/09/2016 அன்று நமது மாநில செயற்குழு கூட்டம் AITUC மாநில சங்க அலுவலகத்தில் நடந்தது . இதில் நமது மாநில தலைவர் தோழர் .மாலி தலைமை தாங்கினார் .துவக்கமே அருமையான உரை . தோழர் . தங்கமணி ,மாநில துணை தலைவர் அஞ்சலியுரை நிகழ்த்தினார் . துவக்கயுறை அகில இந்திய சம்மேளன  செயலர் தோழர் .G.ஜெயராமன்  நிகழ்த்தினார்.
மாநில செயலர் தோழர் S.ஆனந்தன்  வரவேற்புரையாற்றினார் . பின்பு செயல்பட்டறிக்கை விவாதத்திற்கு வைக்கப்பட்டது .வாழ்த்துரையாக தோழர்.J. லக்ஷ்மணன்  AITUC மாநில செயலர்  மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு நிகழ்வுகளை பற்றியும் விளக்கினார் .நமது அகில இந்திய பொது செயலர் தோழர் .C .K .மதிவாணன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது அறிக்கையில் பல்வேறு நிகழ்வுகளை பற்றியும் நமது சங்கம் அகில இந்திய மட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் துவங்கி இருப்பதை பற்றியும் ,BSNL-EU சங்கம் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் ஏமாற்று வேலைகள் மட்டும் தான் செய்து வருகிறது என்றும் போராட்ட பாதையில் நம் சங்கம் எடுத்துள்ள பிரச்சனைகள் பற்றியும் சிறப்புரை நிகழ்த்தினார். கரையில் களைத்து நம்மோடு இணைத்த தோழர் .மாரியும், முருகனும் பேசுகையில் மேடை போட்டு ,விழா நடத்தி கலைகின்ற கூட்டமாய் யார் இருந்தாலும் குற்றம்! குற்றமே !!! என்று தொழிலாளி வர்கம் அனைத்து விதமான அடக்குமுறை ,உழைப்பு சுரண்டல் மற்றும் வயற்றில் அடிக்கும் முதலாளிகளின் கையில் சிக்கி தவிக்கும் நிலைப்பற்றியும், அவர்களை காக்க NFTCL சங்கம் மட்டுமே தொடர்ச்சியாக போராடுவதை பார்த்துதான் நாங்கள் இணைத்தோம் என்ற வார்த்தைகள் புதிய ஒலி பிறக்க செய்தது.
 நல்ல உணவு ஏற்பாடு செய்த சென்னை தோழர்களை நமது மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது . வாழ்த்துரையாக தோழர்கள் கடலூர் அன்பழகன் ,புதுவை அசோக்ராஜன், கோவை மாவட்ட செயலர் மற்றும் NFTE மணிலா பொருளாளர்  சுப்பாராயன் ,திருச்சி NFTCL மாவட்ட செயலர் மில்டன்  நமது BSNL சொசைட்டி துணை தலைவர் சி.கே.ரகுநாதன் ,நமது பொருளாளர்  அகில இந்திய சிறப்பு அழைப்பாளர்  தோழர். இளங்கோவன் -சென்னை
தோழர் தருமன் ,நமது மாநில பொருளாளர்  பாபு நன்றி கூறி செயற்குழு கூட்டத்தை முடித்து வைத்தார் .
















 











.





வீழ்ந்து விட்டோம்... விழாக்களில்...

இந்த மாதம் வைப்பு நிதி வரவேயில்லை.
வைப்பு நிதி ஏன் பட்டுவாடா செய்யப்படவில்லை?
இந்தப்பிரச்சினைக்கு  நிரந்தரத்தீர்வு என்ன?
யாருக்கும் வெட்கமில்லை... யாருக்கும் கவலையுமில்லை...

DELOITTE குழு  பரிந்துரைகளை 
தமிழகத்தில் அமுல்படுத்த விடமாட்டோம் என்று  சொல்லப்பட்டது. 
முதற்கட்டமாக 4 மாவட்டங்கள் இரண்டு வணிகப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு தமிழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
இதைப்பற்றி எந்த வித கருத்தும் இல்லை...
சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் கூட குரல் எழுப்பவில்லை. 

புதிய இணைப்புகள் கொடுக்க வகையற்ற இடங்களில் 
TECHNICALLY NOT FEASIBLE இடங்களில்...
புதிய இணைப்புக்கள் கொடுக்கும் பணியை  
குத்தகை மூலம் தனியாருக்கு கொடுக்க நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இந்த இணைப்புக்கள் மூலம் கிடைக்கும் 
வருமானத்தில் 35 சதம் தனியாருக்கு வழங்கப்படுமாம்.
இதைப்பற்றியும் தமிழ் மாநிலச்சங்கத்தில்... 
எந்தவித கருத்தும் இல்லை. கவலையுமில்லை.

ஆனால் விழாக்கள் மட்டும்...
விறுவிறுப்பாகக் கொண்டாடப்படுகின்றன...
தனி நபர்கள் தலை மேல் வைத்து கூத்தாடப்படுகிறார்கள்..
தவிக்கும் தொழிலாளர்களோ பந்தாடப்படுகிறார்கள்...

மாநில மாநாடுகள்... மாவட்ட மாநாடுகள்... 
கிளை மாநாடுகள்... சிறப்புக்கூட்டங்கள்... 
பாராட்டு விழாக்கள்...கருத்தரங்கங்கள்...
பொன்விழாக்கள்... வைரவிழாக்கள்...
தங்க விழாக்கள்... தகர விழாக்கள்...
முப்பெரும் விழாக்கள்... நாப்பெரும் விழாக்கள்...
என விழாக்கள் வட்டம் கட்டி கொண்டாடப்படுகின்றன...
தொழிலாளர் பிரச்சினையோ கட்டம் கட்டப்படுகிறது...
மாநில மாநாடுகளில் கூட... 
ஊழியர் பிரச்சினையைப் பற்றி பேச இயலவில்லை... நேரமில்லை...

நமது நிலைமையையும்... 
தலைமையையும்  எண்ணிப்பார்க்கும் போது....
கூட்டத்திற் கூடிநின்று 
கூவிப் பிதற்ற லன்றி, 
நாட்டத்திற் கொள்ளாரடீ!- கிளியே! 
நாளில் மறப்பாரடீ!
இவர் வாய்சொல்லில் வீரரடி.. கிளியே..
என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகிறது...

சனி, 24 செப்டம்பர், 2016

 NFTE-மாநில பொருளர் மற்றும் நமது சங்கத்தின் அகில இந்திய பொருளாளர் தோழர். சுப்பராயன் அவர்களின் துணைவியார் திருமதி மாலா அவர்கள் அகால மரண செய்தி கேட்டு வருந்துகிறோம்.அஞ்சலியை  தெரிவிக்கிறோம். துயரில் பங்கேற்றுு ஆறுதலை தெரிவிக்கிறோம்




வியாழன், 22 செப்டம்பர், 2016

NFTCL MEETING IN FLOWER BAZAAR TELEPHONE EXCHANGE:

 The formation of NFTCL in North Chennai District was held on 21-09-2016 at Flower Bazaar complex . Nearly 40 contract labourers were given Photo ID cards at this meeting. Comrades M.Parthiban and S. Kothandapani were elected District Union President and Secretary respectively. Comrades CKM, Ramasamy, Babu, Elangovan, Anbu , Parthiban, Kothandapani and many other leaders addressed the meeting. South Chennai NFTCL District Secretary Dharuman participated alongside NFTE South Chennai District Secretary Nagarajan. Contract labourers from FBR,HBR , Kelly's and Annanagar exchanges enthusiastically took part in this meeting.





காரைக்குடியில் TMTCLU  கலைப்பு 


மஸ்தூராகப் பணி புரிந்து..
அடிமட்டத் தோழனின் வலிகளை..
வேதனைகளைப் புரிந்தவன் என்ற அடிப்படையில்..
காரைக்குடி TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்க 
மாவட்டச்செயலராக பணி செய்ய உணர்வுடன் சம்மதித்தேன். 
தோழர்.ஆர்.கே.,,அவர்கள் மாநிலத்தலைவராக இருந்ததினால் 
கூடுதல் நம்பிக்கையுடன் பொறுப்பேற்றேன்.

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கூடினோம்...
தீர்மானங்கள் இயற்றினோம்.. தலைவர்களைப் போற்றினோம்...
காலம் பல கடந்தாலும் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளில் 
எந்த வித முன்னேற்றமும் இல்லை. 
குறைந்தபட்சம் சம்பளத்தையாவது.. 
உரிய தேதியில் வழங்க வைக்க முடியவில்லை.
அடையாள அட்டை... மருத்துவ அட்டை...
வைப்பு நிதி, போனஸ், எட்டுமணி வேலை என 
எதையுமே நான் பொறுப்பேற்ற சங்கத்தால் 
நிறைவேற்ற இயலவில்லை. 
மாவட்டத்தில் எங்கள் பலத்திற்கேற்ப
நாங்கள் போராடிய போது...
அப்போதைய தமிழ் மாநிலத்தலைமையால்
நாங்கள் தனிமைப் படுத்தப்பட்டோம்...
நிர்வாகத்திடம் பொல்லாதவர்கள் என
கொளுத்திப் போடப்பட்டோம்.
TMTCLU என்னும் பெயரிலே ஏதேதோ நடந்தது...
ஊழியர்களுக்கு நல்லதைத் தவிர...

கடலூர்... குடந்தை என  அணி சார்ந்த இடங்களில் 
ஒப்பந்த ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டது. 
ஆனாலும் என்ன செய்ய?
தலைவர்களைப் போற்றிப் புகழ்ந்ததைத் தவிர...

ஒப்பந்த ஊழியரின் நிலை கண்டு...
ஓய்வு பெற்ற பின்னும் நிம்மதி இல்லை...
எனவே செயல்படாத... ஒப்பந்த ஊழியரின் நலனில் 
சிறிதும் அக்கறை இல்லாத TMTCLU என்னும் 
பயனற்ற அமைப்பைக் கலைக்கின்றோம்...
விரைவில் உரிய வழி காண்போம்...

தோழமையுடன் 
சி.முருகன்
TMTCLU - முன்னாள் மாவட்டச்செயலர்.

திங்கள், 12 செப்டம்பர், 2016

பாராட்டுகிறோம்
செப்டம்பர் 19
வேலைநிறுத்தம்,
அதன் கோரிக்கைகள்,
சிறை சென்ற தோழர்கள்,
தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட தோழர்கள்,
பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்கள்,
அரசின் அடக்குமுறை
அஞ்சாத நெஞ்சோடு
போராடிய தலைவர்கள்
தியாகத்தை நினைவு  கூறி
தியாகிகள் தின சிறப்புக் கூட்டத்தை
தோழர் மாரி
தலைமையில்  நடத்தும்
காரைக்குடி,மதுரை
மாவட்டச் சங்கங்க்களைப்

பாராட்டுகிறோம்.

புதன், 7 செப்டம்பர், 2016


NFTCL மாநில செயற்குழு கூட்டம் 

சென்னை,சிந்தாதிரபேட்டையில் உள்ள AITUC 

மாநில சங்க அலுவலத்தில் 23/09/2016 

வெள்ளிகிழமை அன்று நடைபெறும். தோழர்கள்! 

தோழியர்கள் , மாநில,மாவட்ட சங்க நிர்வாகிகள் 

மற்றும் தொழிற்சங்க முன்ணோடிகள் அனைவரும் 

தவறாது கலந்து கெள்ளுமாறு அழைக்கிறோம்.





சபாஷ் காரைக்குடி சபாஷ் !!!!!



செப்டம்பர் மாதம்...
பல நாடுகளில் அறுவடையின் மாதம்...
பல நாடுகளில் பள்ளிகள் திறக்கும் மாதம்...
உலகில்..  செப்டம்பர்..
வசந்தத்தின் நுழை வாயில்...
COME... SEPTEMBER..  என்று 
உலகம்  செப்டம்பரை வரவேற்கும்...

ஆனால்.. இந்திய தேசம் மட்டும் 
செப்டம்பரை... GO... SEPTEMBER 
போ...  செப்டம்பர் என்றே சொல்லும்...
காரணம்... இங்கு மட்டும்...
செப்டம்பர் மாதம் போராட்டங்களின் மாதம்...

இங்கு ஆட்சிகள் மாறுகின்றன...
ஆனால் போராட்டக் காட்சிகள் மட்டும் மாறவேயில்லை...

இந்திய  அரசியல் அமைப்புச்சட்டம்..
1949..  நவம்பர் 26ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு...
1950.. ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது...

இந்திய  அரசியல் அமைப்புச்சட்டம்..
தோன்றும் முன்னே.. குறைந்த பட்சக்கூலி சட்டம் 
1948.. மார்ச் 15ல் தோன்றியது...
கூலி பட்டுவாடா சட்டம் 1936... PAYMENT OF WAGES ACT 1936..
அதற்கும் முன்னே தோன்றியது..
குறைந்த பட்சக்கூலி என்பதற்கு சட்டம் இருந்தாலும்...
இந்தியத் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து.. 
குறைந்தபட்சக்கூலி உயர்விற்காக குரல் கொடுத்து வருகிறது...
ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம்... 
கூலிக்காக... போராடும் மாதமாக மாறிவிட்டது...

இந்த ஆண்டு...
கூலித்தொழிலாளிகள் மட்டுமல்லாது...
பெரும்பகுதி அரசு ஊழியர்களும்...
பொதுக்கோரிக்கைகளோடு தங்களது
கோரிக்கைகளுக்காகவும்...களம் இறங்கினர்...

கோடிக்கால் பூதமென... கோடிக்கணக்கான தொழிலாளர்கள் 
நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்தனர்...
நாற்சந்திகளில் மறியல் செய்தனர்...

நாட்டின்  நிதி அமைச்சர் 
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சக்கூலி ரூ.350/- என்றும்..
மாதத்திற்கு ரூ.9100/- என்றும் பேரம் பேசினார்...

இத்தனை காலம் ஆண்டவர்களை விட...
ஆளும் எங்களுக்கு தொழிலாளி மேல் அக்கறை உண்டு 
என ஆளும் அமைச்சர்கள்  வியாக்கியானம் செய்தனர்...

விடை சொல்ல வேண்டிய பிரதமர்.. 
வீட்டுப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய பிரதமர்..
வீட்டை விட்டு  விமானம் ஏறி வியட்நாம் சென்று விட்டார்...

அற்ப சலுகைகளைக் காட்டி அரசு ஆசை காட்டினாலும்...
தொழிலாளி வர்க்கம் உறுதியோடு நின்று 
உலகின் மாபெரும் வேலை நிறுத்தத்தை
ஒற்றுமையோடு நாடு முழுக்க நடத்தியுள்ளது...

 நமது நெஞ்சார்ந்த நன்றியையும்...வாழ்த்துக்களையும்...
தோழர்களுக்கு நாம் உரித்தாக்க வேண்டும்...

நமது நன்றியும்... வாழ்த்துக்களும்...
ஒரு நாள் சம்பளம் இழந்தவர்களுக்கும்...
விடுப்பெடுத்த வீரர்களுக்கும் அல்ல...

மாறாக... அதோ 
அத்தக்கூலிகளாக... அன்றாடங்காய்ச்சிகளாக ...
நித்தம் வாழ்வில் போராடும்...
காலுக்கு செருப்பில்லாத ... கண்கவர் உடையில்லாத..
கொளுத்தும் வெயிலில்... குளிக்கும் வியர்வையில்..
உருகும் தார் ரோட்டில்...கையில் செங்கொடியுடன்... 
உணர்வுடன்  அமர்ந்து... துணிவுடன் நிமிர்ந்து..
ஆளும் குப்பைகளின் அலட்சியம்  எதிர்த்துப் போராடிய..
துப்புரவுத் தொழிலாளிக்கு நமது செவ்வணக்கங்கள்...

செவ்வாய், 6 செப்டம்பர், 2016


NFTCL State Executive Commitee meeting on23-09-16 at 

Chennai:

The Tamilnadu state union of NFTCL has decided to hold its Executive Committee meeting at Chennai on September-23. It's State Secretary S.Anandan informed Chennai Telephones NFTE circle Union this and requested us to participate and greet the meeting. We offered our fullest cooperation for the successful conductance of this meeting .The most exploited workers in Telecom Sector today are Contract Labourers. They did not enjoy the concept of Equal pay for Equal work. In many places even the legal minimum wages are denied to them. The contractors are exploiting them to the maximum taking advantage of rampant unemployment prevailing in each and every sector of Industry in our country. We know in some places the PF amount collected from them were not at all remitted in to their PF accounts promptly. Such is the condition of these telecom contract labourers. If Union is formed to settle their grievances immediately the contractors stopped the work and these very labourers denied their livelihood- daily wages. Even in BSNL which is supposed to be a model employer the situation is very bad in many places.
NFTCL Tamilnadu State committee is doing it's job very effectively and intervened in every single exploitation and sought the help of Labour Commissioner office promptly. It has filed many court cases and won the denied facilities. We appreciate the work of NFTCL State office bearers particularly its Secretary S.Anandan. It is needless to point out that NFTCL must be strengthened further to end the exploitation of contract labourers in Telecom Sector.
NFTCL Tamilnadu State committee is doing it's job very effectively and intervened in every single exploitation and sought the help of Labour Commissioner office promptly. It has filed many court cases and won the denied facilities. We appreciate the work of NFTCL State office bearers particularly its Secretary S.Anandan. It is needless to point out that NFTCL must be strengthened further to end the exploitation of contract labourers in Telecom Sector.


.