வியாழன், 2 மார்ச், 2017

உலக தலைவர்கள்
எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்

டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார். ஆம், இது உன்மை தான்,

இதைப் பார்க்கும் போது உலக தலைவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும். சம்பளம் மட்டும் இல்லாமல் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் வரி, இலவசம் என பல சலுகைகளை தங்களது பதவி காலத்தில் அனுபவிக்கின்றனர். இங்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் 2015 ஆம் ஆண்டின் தரவின் படி வழங்கப்படிகிறது. இந் பராக் ஒபாமா

2016 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தன்னுடைய சம்பளமாக 4,00,000 டாலர்களைப் பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 2.72 கோடியாகும். ஜஸ்டின் ட்ரூடியோ

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ 2015 ஆம் ஆண்டு வரை 2,60,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.77 கோடி ரூபாய் ஆகும். அங்கேலா மேர்க்கெல்

ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் 2,34,400 டாலர்கள் சம்பளமாக பெறுகிறார். இது இந்திய மதிப்பில் 1.59 கோடி ரூபாய் ஆகும். ஜேக்கப் ஜுமா

தென் ஆப்ரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா 2015 ஆம் ஆண்டு வரை 2,23,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார் அதாவது இந்திய மதிப்பில் 1.51 கோடி ரூபாயாகும்.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே 2,03,000 டாலர்களை சம்பளமாக 2015 ஆண்டு வரை பெற்றுவந்துள்ளார் அதாவது இந்தியமதிப்பில் 1.38 கோடி ரூபாயாகும்.

துருக்கியின் ஜனாதிபதி ரிசிப் தயிப் எர்டோகன் 2015 ஆம் ஆண்டு வரை 1,97,000 கோடி சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய பதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும்.

பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் 2015 ஆம் ஆண்டு வரை 1,94,000 டாலர் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மேவின் சம்பளம் 1,78,250 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.2 கோடி ரூபாய்.

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 1,36,000 டாலர் சம்பளமாக பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 92 லட்சம் ரூபாய் ஆகும்.

இத்தாலியின் பிரதம மந்திரி மடியோ ரென்சியும் 1,24,600 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 30,300 டாலர் சம்பளமாக பெறுகிறார். இந்திய மதிப்பில் 20.63 லட்சம் ஆகும்.


சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் 22,000 டாலர் சம்பளம் பெற்று வருகிறார் அதாவது இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாயாகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக