வெள்ளி, 3 மார்ச், 2017

         பார்ப்போம் இந்த மாதம்...

தொழிலாளி வியர்வை மண்ணில் சிந்துமுன் அவனுக்கான ஊதியம் வழங்கபட வேண்டும் என்பார்கள் ஆனால் நமது இலாகாவில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிலை சொல்லிமாளாது .வேலைக்கேற்ற   ஊதியமில்லை என்பது ஒரு பங்கு என்றாலும் அந்த குறைந்த பட்ச சம்பளம் எந்த தேதியில் வரும் என்ற நிலை காலம் காலமாக தொடர்ச்சியான பிரச்சனையாய் இருந்து வருகிறது என்று நமது சங்கத்தின் சார்பாக Asst.Labour Commissioner-புதுவை  முன்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு நல்ல முடிவை எட்டியது .இதன்படி  பிரிதிமாதம் 7 ஆம் தேதிக்குள் சம்பள பட்டுவாடா செய்யப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் நமது ஒப்பந்தரரோ அல்லது நிர்வாகமோ 10 சதவீத அபராதமாக அதாவது ஒரு தொழிலாளிக்கு 60,000/- சம்பளம் கொடுக்க நேரிடும் என்று எச்சரித்து வரும் காலங்களில் இப்பிரச்சினை தவிர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பு அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும். மறுபடி , மறுபடி நாம்  கேட்கும்  கேள்வி என்னவென்றால் ஒப்பந்தம் எடுத்தவர் முதலீடு செய்யாமல் நிறுவனத்தின் பணத்தை வாங்கிகொடுக்கும் தரகு வேலை பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது . நிறுவனத்தில் பில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், செய்யப்படாவிட்டாலும்ஒப்பந்தம் எடுத்தவர் முதலீடு செய்யவேண்டும் இல்லையென்றால் அவர் எடுத்த டெண்டர் blacklist  செய்யப்பட வேண்டும். பார்ப்போம் இந்த மாதம்

No automatic alt text available.

Image may contain: 17 people, crowd and outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக