வெள்ளி, 2 ஜூன், 2017

                             முத்தரப்பு பேச்சுவார்த்தை 

நமது மாநில சங்கத்தால் "சமவேலைக்கு சம ஊதியம்"  என்ற வழக்கு இரண்டு ஆண்டுகளாய் DCLC (துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ) அவர்கள் முன்னிலையில் நடைபெறுவது அனைவரும் அறிந்த ஓன்று. இன்று (02/06/2017) அதற்கான பேச்சுவார்த்தைக்கு  தொழிலாளர் நல ஆணையத்திடம் இருந்து அழைப்பு வந்தது.இன்றைய சிறப்பு என்னவென்றால் நமது பொது செயலர் "பேச்சுவார்த்தைக்கு நான் வருகிறேன் என்பதுதான் " நிறைய பேசினோம் இருதரப்பை யோசிக்க வைத்தோம். வாங்கும் வேலைக்கு சம்பளம் தர மறுக்கும் நிர்வாகம் "சமவேலைக்கு சம ஊதியம்" எப்படி தரும் முதலில் வேலைக்கேற்ற ஊதியம் தரட்டும் "சமவேலைக்கு சம ஊதியம்"  என்பதை உறுதி செய்யலாம் என்ற DCLC (துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ) வார்த்தை,  நமது நிறுவனத்தை பற்றிய அனுபவம்.நமது நிர்வாகமும் வருகின்ற 29/06/2017 அன்றுக்குள்  வேலைக்கேற்ற ஊதியம் அனைத்து மாவட்டங்கள்  தர ஆணையிடுவோம் என்று கூறினார் . போராட்டம் நமக்கு புதிதல்ல பழகி போன ஒன்று . ஆனால் பழக்கத்தை மாற்ற போகிறோம் மாற்றம் ஒன்றே  தீர்வு !!! 
பார்ப்போம் 10/06/2017 தர்ணா போராட்டத்தில் நாம் யார் என்று காண்பிப்போம் !
Image may contain: 2 people, people sitting, table and indoor

Image may contain: 4 people, people sitting and indoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக