செவ்வாய், 12 டிசம்பர், 2017

ஏன் இந்த வேலை நிறுத்தம் ?
தோழர்!!! தோழியர்களே !!!
01-01-2017 முதல் அமுலாகவேண்டிய 3 வது ஊதிய குழு கூட்டம் இந்த வருட கடைசி மாதமான டிசம்பர் வரை கூட்டப்படவில்லை . பொதுத்துறை நிறுவனமான COAL-INDIA வில் 5 வருடத்திற்க்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம்20 சதவீத fitment .BSNL -பொதுத்துறையில் பணிபுரியும் எங்களுக்கு 10 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய மாற்றம், ஏற்றுக்கொண்டோம் ஆனால் எதையுமே ஏற்றுக்கொள்ளாத மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ விற்கு விளம்பரதராக மாறியதுதான் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காட்டில், மேட்டில், வெயிலில், குளிரில் நாங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த எங்கள் நிறுவன 6,000 டவர்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்மானம் என்பது BSNL டவர்களை வெட்டி BSNL -க்கு சூப் கொடுப்பது போல் . அதாவது நாய் வலை வெட்டி நாயிக்கே சூப் வைப்பது போன்று .
பெருபாலான BSNL ஊழியர்களுக்கு இதுவே கடைசி ஊதிய மாற்றம் ஏனென்றால் தொலைபேசி துறையில் கடந்த 1984 ஆண்டு முதல் ஆளெடுப்பு தடை சட்டம் அமுலில் இருப்பதால் புதிய தோழர்களுக்கான வாய்ப்பெ இல்லை .ஆதலால்தான் காலிபணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை வைத்து நிரப்பு என்ற வாதத்தை NFTCL சங்கம் முன்னிறுத்திக்கிறது. போராட்டம் வெல்வது உறுதி அதில் நமது சங்க தோழர்களும் கலந்து கொண்டோம் என்பது சிறப்பு .போராடி தோற்றதில்லை !!!போராடாமல் வென்றதில்லை. போராடு !போராடு!! வெற்றிகிட்டும் வரை போராடு!!!!! NFTCL Zindabad ....,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக